பதிவு செய்த நாள்
17
ஜன
2013
11:01
சங்ககிரி: சேலம் மாவட்டம், சங்ககிரி தாலுகா மகுடஞ்சாவடி அழகனூர் ஈச்சங்காட்டில் அமைந்துள்ள பேரூர் பெரியகாணி கருப்பன் கூட்டத்தார் குலதெய்வமாகிய அய்யனாரப்பன், கருப்பசாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை(18ம் தேதி) காலை, 5.30 மணிக்கு நடக்க உள்ளது. இன்று காலை, 8.30 மணிக்கு, கோபுரத்தில் கலசம் வைத்தல், இரண்டாம் கால யாக வேள்விகள், பூர்ணாஹூதி, தீபாராதனை, பரிவார தெய்வத் திருமேனிகள் பிரதிஷ்டை செய்து அஷ்டபந்தனம் சாற்றுதல், மாலை, 5 மணிக்கு, கணபதி பூஜை, புண்யாஹம், திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி உள்ளிட்ட பூஜைகள் நடக்கின்றன. நாளை காலை, 5.30 மணி முதல், விக்னேஸ்வர பூஜை, புண்யாகம், நாடிசந்தானம், நான்காம் கால யாக வேள்வி, தீபாராதனை உள்ளிட்டவையும், காலை, 9 மணிக்கு கும்பங்கள் யாக சாலையில் இருந்து புறப்படுதல், காலை, 9.10 மணிக்கு, கோபுரங்களுக்கு கும்பாபிஷேகமும், 9.45 மணிக்கு, பரிவார தெய்வத் திருமேனிக்கு கும்பாபிஷேகமும் நடக்க உள்ளது. காலை, 10 மணிக்கு, கோ பூஜை, மகா அபிஷேகம், பிரசாதம் வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.