கெங்கவல்லி: கெங்கவல்லி அருகே, காணும் பொங்கல் பண்டிகையொட்டி மாரியம்மன் ஸ்வாமிக்கு சிறப்பு வழிபாடு பூஜைகள், வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது. கெங்கவல்லி அருகே, ஆணையாம்பட்டி மாரியம்மன் கோவில் வளாகத்தில், காணும் பொங்கல் பண்டிகையொட்டி நடந்த வழுக்கு மரம் ஏறும் நிகழ்ச்சியில், வாலிபர்கள் பங்கேற்று, மரத்தில் கட்டியிருந்த குடம், அதிலிருந்து பணம், திண்பண்டங்களை எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. அதே போல், தெடாவூர் மாரியம்மன் கோவிலில், பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழச்சி நடந்தது.