ஈரோடு: மாட்டுப்பொங்கலை முன்னிட்டு, ஈரோடு 46புதூரில் உள்ள லட்சுமிநாராயணஸ்வாமி கோவிலுக்கு சொந்தமான கோசாலை பண்ணையில் ஜன 16 கோமாதா பூஜை நடந்தது. பண்ணையில் உள்ள கிருஷ்ணர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. அங்குள்ள தெப்பக்குளம் அருகே கரும்பு, சர்க்கரை பொங்கல், மூக்கணாங்கயிறு வைத்து பூஜித்தனர். பின், பசு, காங்கேயம் காளை, குதிரைக்கு பூஜை செய்யப்பட்டது. மாட்டுத்தொழுவத்தில் சிறப்பு பூஜை செய்து, பசுக்களுக்கு தீபாரானை செய்து, பழம், சர்க்கரை பொங்கல் கொடுக்கப்பட்டது. கோசாலை நிர்வாகி சுயம்பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.