வீரப்ப அய்யனார் கோயில் சித்திரை திருவிழா கோலாகலம் தேனியில் விழாக்கோலம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
14ஏப் 2026 09:04
தேனி: சித்திரை திருவிழாவை முன்னிட்டு அல்லிநகரம் கோயிலில் இருந்து ஊர்வலமாக சோலைமலை அய்யனார் கோயிலுக்கு வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் சென்றார்.
அல்லிநகரம் வீரப்ப அய்யனார் மலைக்கோயில் சித்திரை திருவிழா மார்ச்29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்.,10ல் காவடிகளுக்கு கலம் கட்டுதல் நிகழ்வு நடந்தது. நேற்று அல்லிநகரம் ஊர்கோயிலில் இருந்து வீரப்ப அய்யனார் குதிரை வாகனத்தில் பக்தர்கள் சூழ பெரியகுளம் ரோடு, மதுரை ரோடு வழியாக பங்களாமேடு சோலைமலை அய்யனார் கோயிலுக்கு சென்றார். சுவாமியை பின் தொடர்ந்து பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலமாக சென்றனர். இன்று காலை அல்லிநகரத்தில் இருந்து ஊர்வலமாக மலைக்கோயிலுக்கு சுவாமி சென்றார். அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இரவு மலைக்கோயில் இருந்து புஷ்ப அலங்காரத்தில் அல்லிநகரம் திரும்புகிறார்.