பழநி:தைப்பூச பக்தர்கள் வசதிக்காக 53 இடங்களில் தற்காலிக நிழற்பந்தல்கள் கோயில் நிர்வாகத்தால் அமைக்கப்பட்டுள்ளது. தைப்பூசத்திற்கு வரும் பாதயாத்திரை பக்தர்கள் தங்கி, இளைப்பாறி செல்ல வசதியாக பழநிதிண்டுக்கல் ரோட்டில் 21 இடங்கள், மதுரைபழநி ரோட்டில் 14 இடங்கள், தாராபுரம்பழநி ரோட்டில் 5 இடங்கள், பழைய தாராபுரம் ரோட்டில் 3 இடங்கள், என, மொத்தம் 53 இடங்களில் குடிநீர், மின் வசதியுடன் கூடிய தற்காலிக நிழற்பந்தல்கள் அமைக்கப்பட்டுள்ளது. மலைகோயிலில் சுவாமி தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு குடிநீர், குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கப்பட உள்ளது. தரிசன டிக்கெட் வரிசையில் நிற்பவர்களுக்கு வழங்கப்படும். மருத்துவ வசதி மற்றும் முதலுதவி மையங்களும் அமைக்கப்பட உள்ளது. நாள் முழுவதும் அன்னதானம் வழங்கும் திட்டத்தின் கீழ் வழக்கமான எண்ணிக்கையை விட அதிகமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கவும், கால நீட்டிப்பு செய்யவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.