உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேரோட்டம்: வரும், 25ம் தேதி துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18ஏப் 2026 12:04
பெருமாநல்லுார்: பெருமாநல்லுாரில் உள்ள கோவர்த்தனாம்பிகை உடனமர் உத்தமலிங்கேஸ்வரர் கோவிலில் சித்ரா பவுர்ணமி தேர்த்திருவிழா வரும், 25ம் தேதி காலை, 9:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கி நடைபெறுகிறது.
விழாவையொட்டி, 24ம் தேதி காலை முதல் இரவு வரை உத்தமநாச்சியம்மனுக்கு அபிஷேக பூஜை, தேர் முகூர்த்த கால் நடல், வாஸ்து சாந்தி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. 29ம் தேதி இரவு 8:00 மணிக்கு ரிஷப வாகனத்தில் உற்சவமூர்த்தி காட்சியளித்தல், 30ம் தேதி இரவு திருக்கல்யாண வைபவம் ஆகியன நடக்கிறது. மே மாதம் 1ம் தேதி மாலை 3:30 மணிக்கு தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேர் வடம் பிடித்து இழுக்கின்றனர். மே 2ம் தேதி இரவு 8:00 மணிக்கு பரிவேட்டை, குதிரை வாகனத்தில் சுவாமி புறப்பாடு, 3ம் தேதி காலை 9:00 மணிக்கு சிறப்பு தரிசனம், நடராஜர் அபிஷேகம், 4ம் தேதி காலை 9:00 மணிக்கு மஞ்சள் நீருடன் விழா நிறைவு பெறுகிறது. விழா ஏற்பாடுகளை, கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் அறங்காவலர் தலைவர் மற்றும் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.