விருத்தாசலம்: கிருத்திகையொட்டி, விருத்தாசலம் கோவில்களில் முருகன் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது.
விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் வள்ளி தெய்வானை சமேத சண்முக சுப்ரமணியர், 28 சிவ ஆகம சன்னதியில் உள்ள குமரேஸ்வரர் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது. மாலை சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். மணவாளநல்லுார் கொளஞ்சியப்பர் கோவி லில் சுவாமிக்கு 12 வகையான திரவிய பொடிகளால் சிறப்பு அபிேஷகம், வெள்ளிக் கவசம் சாற்றி தீபாராதனை நடந்தது. மாலை சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். இதே போன்று, கருவேப்பிலங்குறிச்சி சாலையில் உள்ள வேடப்பர், கண்டியங்குப்பம் வெண்மலையப்பர் கோவில்களிலும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பக்தர்கள் அர்ச்சனை, நெய் மற்றும் வெற்றிலை விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.