குன்னூர் தந்தி மாரியம்மன் திருவிழா 61வது ஆண்டு உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஏப் 2026 03:04
குன்னூர்: குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் இன்று கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் சார்பில் 61வது ஆண்டு உற்சவம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் குன்னூர் தந்தி மாரியம்மன் கோவில் சித்திரை தேர் திருவிழாவில் இன்று கிருஷ்ணாபுரம் பொதுமக்கள் சார்பில் 61வது ஆண்டு திருவிழா நடந்தது கிருஷ்ணாபுரம் கோவிலில் இருந்து அபிஷேகப் பொருட்களுடன் தீர்த்தக்குட ஊர்வலம் திருத்தேரில் வைக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது. விழாவில் மங்கள வாத்தியம், பேண்ட் இசை, செண்டை மேளம் முழங்க கேரள மகளிரின் நடனம் மற்றும் வேடமணிந்தவர்களின் அலங்கார ஊர்வலம் இடம் பெற்றது. முக்கிய வீதிகளின் வழியாக வந்த இந்த ஊர்வலம் தந்தி மாரியம்மன் கோவிலை அடைந்தது. அங்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலையில் அம்மன் திருத்தேர் ஊர்வலம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.