Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவள்ளூர் வீரராகவர் கோவிலில் ... அன்னை சாரதா தேவியார் கோயில் மகா கும்பாபிஷேகம் அன்னை சாரதா தேவியார் கோயில் மகா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கண்ணகி கோயிலுக்கு பளியன்குடி வழியாக ரோடு அமைப்பதை தீர்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கண்ணகி கோயிலுக்கு பளியன்குடி வழியாக ரோடு அமைப்பதை தீர்வு

பதிவு செய்த நாள்

20 ஏப்
2026
04:04

கூடலுார்: கண்ணகி கோயிலுக்கு ரோடு அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என கடந்த ஆண்டு கோயிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு அறிவித்தது இதுவரை செயல்படுத்தாமல் கானல் நிராகியுள்ளதால் பக்தர்கள் புலம்பியுள்ளனர்.


தேனி மாவட்டம் கூடலுார் பளியன்குடி அருகே விண்ணேற்றிப்பாறை மலை உச்சியில் அமைந்துள்ளது தமிழக வரலாற்று சிறப்புமிக்க மங்கலதேவி கண்ணகி கோயில். இக்கோயிலுக்கு செல்ல லோயர்கேம்ப் பளியன்குடியில் இருந்து 6.6 கி.மீ., துார தமிழக வனப் பாதை உள்ளது. இது தவிர கேரளா குமுளியில் இருந்து கொக்கரக்கண்டம் வழியாக 14 கி.மீ., தூரத்தில் கேரள வனப்பகுதியில் ஜீப் பாதை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று மட்டும் இங்கு விழா கொண்டாடப்படும். இக்கோவிலுக்கு செல்ல ஜீப் பாதை கேரள வனப்பகுதியில் இருப்பதால் கேரளாவின் அனுமதியுடன் பக்தர்கள் செல்ல வேண்டிய நிலை உள்ளது. தமிழக வனப்பாதையில் வாகனங்கள் செல்ல முடியாததால் பக்தர்கள் அதிகமாக நடந்து செல்ல முடியாமல் கேரள வனப்பாதையை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.


கெடுபிடி: கோயிலின் முகப்பு வாயில் தேனி மாவட்டத்தை நோக்கிய அமைந்துள்ளது. 1817 ல் பழமையான கிழக்கு இந்திய கம்பெனி சர்வேயும்,1893, 1896 ல் நடத்திய சர்வேயிலும், 1913, 1915ல் வெளியிட்ட எல்லைக்காட்டும் வரைபடங்களிலும் கோயில் தமிழக வனப்பகுதியிலேயே உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 1976 ல் தமிழ்நாடு, கேரள அதிகாரிகள் கூட்டாக நடத்திய சர்வேயிலும் கோயில் 40 அடி தூரம் தள்ளி தமிழக வனப் பகுதியில் இருப்பது ஒப்புக்கொள்ளப்பட்டது. அதன் பின்பு கேரள வனப்பகுதியில் அவசர அவசரமாக வாகனங்கள் செல்வதற்கான பாதை அமைக்கப்பட்ட பின்னர் கேரளாவின் கெடுபிடி துவங்கியது.


தீர்வு என்ன: தமிழக வரலாற்று சிறப்புமிக்க இக்கோயிலில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே சித்ரா பவுர்ணமி தினத்தன்று விழா கொண்டாடப்படுகிறது. அந்த நேரத்திலும் கேரள வனப்பகுதி வழியாக பக்தர்கள் அதிகம் செல்வதால் கேரள வனத்துறை பல்வேறு கெடுபிடிகளை செய்து தமிழக பக்தர்களை புண்படுத்தி வருகிறது. தமிழக வனப் பகுதியான பளியன்குடியில் இருந்து வாகனங்கள் செல்வதற்கான ரோடு அமைப்பதே தீர்வு என பக்தர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.


சர்வே: தமிழக வனப்பகுதி வழியாக கோயிலுக்கு செல்ல வாகனங்கள் செல்லும் வகையில் பல ஆண்டுகளுக்கு முன் ரோடு இருந்துள்ளது. காலப்போக்கில் அவை சீரமைக்காமல் இருந்ததால் நடைபாதையாக மாறியது. 35 ஆண்டுகளுக்கு முன்பு மீண்டும் கோயில் வரை ரோடு அமைக்க தமிழக அரசால் சர்வே பணி மேற்கொள்ளப்பட்டது. தொடர் நடவடிக்கை இல்லாததால் அப்பணி முடக்கப்பட்டது. சமீபத்திலும் ரூ. 20 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு சர்வே பணிகள் நடந்தன. ரோடு அமைக்க பளியன்குடி வழியாக 6.6 கி.மீ., தூரமும், தெல்லுக்குடி வழியாக 3.6 கி.மீ., தூரமும் உள்ளது.


அமைச்சர் பார்வை: கடந்த ஆண்டு (2025) சித்ரா பவுர்ணமி தினத்தன்று கோயிலுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபு தமிழக வனப்பகுதி வழியாக விரைவில் ரோடு அமைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தார். ஆனால் ஓராண்டாகியும் அதற்கான எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை. 


ஜெகன், கூடலுார் ஹிந்து முன்னணி: ஒவ்வொரு ஆண்டும் கண்ணகி கோயிலில் தமிழக பக்தர்களை அனுமதிக்கும் நேரம் குறைக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில ஆண்டுகளில் மொத்தமாக கேரளாவில் கட்டுப்பாட்டிற்கு கொண்டு சென்று, தமிழக பக்தர்கள் வழிபட முடியாத நிலை ஏற்படும். அதனால் ரோடு அமைப்பதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்தினால் மட்டுமே தமிழக பக்தர்கள் கேரளாவின் எவ்வித கெடுபிடிகளும் இன்றி மாதந்தோறும் கண்ணகி அம்மனை வழிபட முடியும்.


பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்: மாற்றுத்திறனாளிகள் மாணவர்களின் வளர்ச்சிக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது என ... மேலும்
 
temple news
மேலூர்: வெள்ளலூர் நாட்டில் குழந்தைகளை அம்மனாக பாவிக்கும் ஏழைகாத்தம்மன் கோயில் திருவிழாவில் திரளான ... மேலும்
 
temple news
உடுமலை; சங்கடகர சதுர்த்தியை முன்னிட்டு உடுமலை சித்தி புத்தி விநாயகர் கோவிலில் சிறப்பு அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
உடுமலை: உடுமலை, ஐஸ்வர்யா நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ கற்பக விநாயகர், ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஸ்ரீ கல்யாண ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா அக்., 10 தேதி தொடங்கி, 22ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar