Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்புல்லாணியில் அட்சய திருதியை ... கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ரூ.19 லட்சத்தில் புதிய மரக்கதவு திறப்பு கோட்டை பெரிய மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம்

பதிவு செய்த நாள்

20 ஏப்
2026
05:04

பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயில் சித்திரைத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.


பரமக்குடி சவுராஷ்டிர பிராமண மகாஜனங்களுக்கு சொந்தமான சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தானம் விசாலாட்சி அம்பிகா சந்திரசேகரசுவாமி (ஈஸ்வரன்) கோயில் உள்ளது. கோயிலில் நேற்று இரவு காப்பு கட்டப்பட்டு, இன்று காலை 10:00 மணிக்கு கொடிமரத்தில் நந்தி கொடியேற்றப்பட்டது. பின்னர் அபிஷேகம் நடந்து மகா தீபாராதனைக்கு பின் பிரசாதங்கள் வழங்கப்பட்டது. இரவு பஞ்ச மூர்த்திகள் சிம்மாசனத்தில் புறப்பாடு நடந்தது. தினமும் நந்தி, கிளி, குண்டோதரன், சிம்மம், கற்பக விருட்சம், அன்னம், காமதேனு, ரிஷப வாகனங்களில் உலா வருவர். ஏப்., 26 காலை நடராஜர் புறப்பாடு, இரவு குதிரை வாகனத்தில் சந்திரசேகர சுவாமி, விசாலாட்சி திக் விஜயம் நடக்கிறது. ஏப்., 27 காலை விசாலாட்சி கமல வாகனத்தில் தபசு திருக்கோலத்தில் எழுந்தருளுகிறார். அன்று மாலை 5:00 மணிக்கு சுவாமி, அம்பாள் மாலை மாற்றல் நடக்கும். ஏப்., 28 காலை 11:00 மணிக்கு விசாலாட்சி, சந்திரசேகரசுவாமி திருக்கல்யாணம் நடந்து, இரவு பூ பல்லக்கில் பட்டன பிரவேசம் வருகின்றனர். ஏப்., 29 காலை 9:15 மணிக்கு சித்திரை தேரோட்டம் ரத வீதிகளில் நடக்கிறது. மறுநாள் தீர்த்தவாரி உற்சவம் மற்றும் இரவு கொடி இறக்கப்படும். மே 1 காலை உற்சவ சாந்தி, அபிஷேகம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள் செய்கின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருநள்ளாறு: காரைக்கால் திருநள்ளாறு கோவிலில் புரட்டாசி சனியை முன்னிட்டு இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் உலகளந்த பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையை ... மேலும்
 
temple news
காரைக்கால்: காரைக்கால் நித்ய கல்யாண பெருமாள் கோவிலில் புரட்டாசி முன்னிட்டு இன்று முத்தங்கி சிறப்பு ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் சனி கிழமையை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar