பதிவு செய்த நாள்
18
ஜன
2013
11:01
ஆட்டையாம்பட்டி: ஆட்டையாம்பட்டியை அடுத்த காகாபாளையம் கனககிரி கிராமத்தில் உள்ள ஸ்ரீ விநாயகர், முத்துக்குமாரசுவாமி, மகா மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு, ஆலய புனருத்தாரன அஷ்டபந்தன மங்கள மகா கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. கடந்த திங்கட்கிழமை, கணபதி ஹோமம், லட்சுமி பூஜை, புண்யாகம், வாஸ்துபூஜை நடத்தப்பட்டது. செவ்வாய்க்கிழமையன்று, முதற்கால யாக பூஜை, யாகவேள்வி, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, தீபாராதனையும், தொடர்ந்து, புதன்கிழமை, இரண்டாம் கால யாகபூஜை, யாக வேள்வி, மூன்றாம் கால யாக பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நேற்று காலை, நான்காம் கால யாக பூஜையும், தத்வஸம்யோஜனம், 96 வகை திரவிய ஸம்போஜனம், மங்கள மகா பூர்ணாஹூதி நடந்தது. தொடர்ந்து, யாத்ரா தானம் செய்யப்பட்டு, அனைத்து தெய்வங்களுக்கும், மகா கும்பிஷேகம் நடத்தப்பட்டது. கும்பாபிஷேகத்தை காண, ஆயிரக்கணக்கான மக்கள் வந்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், அசோகன், ஞானதேசிகன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகிகள், பொதுமக்கள் செய்திருந்தனர்.