பழநி கோயிலுக்கு காளையுடன் தரிசனம் செய்ய வந்த பக்தர்கள்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
21ஏப் 2026 05:04
பழநி: பழநி கோயிலுக்கு காளை உடன் வந்த பக்தர்கள் முருகன் கோயிலுக்கு சென்று தரிசனம் செய்தனர்.
பழநி கோயிலுக்கு ஏராளமான பக்தர்கள் பங்குனி உத்திர திருவிழா நிறைவடைந்த நிலையிலும் வருகை புரிந்து வருகின்றனர். இன்று பழநி அருகே மேல்கரைபட்டியைச் சேர்ந்த மக்கள் கோயில் காளையுடன் வருகை புரிந்தனர். அலங்காரத்துடன் வந்த காளை கிரிவலம் சுற்றி வந்தது. ஆண்டுதோறும் மேல்கரைப்பட்டி பாலமுருகன், குமர வடிவேலன் கோயிலின் காளையுடன் வருகை புரிந்து தரிசனம் செய்து வருகின்றனர். தீர்த்த காவடிகள் எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.