வெள்ளி கவசத்தில் அருள்பாலித்த காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2026 05:04
செவிலிமேடு; சித்திரை மாத திருவாதிரை திருமஞ்சனத்தையொட்டி, காஞ்சிபுரம் செவிலிமேடு ராமானுஜர் நேற்று, வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காஞ்சிபுரம் செவிலிமேடில் சாலை கிணறு ராமானுஜர் கோவில் உள்ளது. சித்திரை மாத திருவாதிரை திருநட்சத்திரத்தையொட்டி, இன்று காலை, 10:00 மணிக்கு ராமானுஜருக்கு சிறப்பு திருமஞ்சனமும், மஹாதீப ஆராதனையும் நடந்தது. தொடர்ந்து வெள்ளி கவச அலங்காரத்தில் ராமானுஜர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில், திரளான பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதமும், அன்னபிரசாதமும் வழங்கப்பட்டது..