சூரிய, சந்திர பிரபை வாகனத்தில் சென்னை காரணீஸ்வரர் எழுந்தருளி உலா
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22ஏப் 2026 05:04
சென்னை: சைதாப்பேட்டை காரணீஸ்வரர் கோவில், சித்திரை மாத பிரம்மோத்சவத்தின் இரண்டாம் நாளான இன்று சூரிய – சந்திர பிரபை வாகனத்தில் பெருமாள் அருள்பாலித்தார். இன்று, அதிகார நந்தி சேவை நடக்கிறது.
சைதாப்பேட்டை சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவிலில், சித்திரை மாத பெருவிழா, நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று காலை சூரிய பிரபையிலும், இரவு சந்திர பிரபை வாகனத்திலும் சோமஸ்கந்தர் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் மூன்றாம் நாளான இன்று, அதிகார நந்தி சேவை நடக்கிறது. வரும் 27ல் தேரோட்டம் நடக்கவுள்ளது. அன்று காலை 7:30 மணிக்கு பக்தர்களால் தேர் வடம் பிடிக்கப்படுகிறது. இரவு, சிறப்பு மலர் அலங்காரங்களுடன் சுவாமி தேரில் இருந்து கோவிலுக்கு எழுந்தருள்கிறார். வரும் 28ல், காலை சிவபாத இருதயரும், திருஞானசம்பந்தரும் கோபதிசரஸ் இந்திர தீர்த்தத்திற்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை புஷ்ப விமானத்தில் 63 நாயன்மார்களுக்கு இறைவன் திருக்காட்சி நடக்கிறது. வரும் 29ல் பிச்சாடனார் கோலத்தில் திருவீதி உலா நடக்கிறது. 30ல் திருக்கல்யாண உற்சவமும், அடுத்த நாள் புஷ்ப பல்லக்கு சேவையும் நடக்கிறது. அன்று இரவு கொடியிறக்கத்துடன் விழா நிறைவு பெறுகிறது.