பதிவு செய்த நாள்
18
ஜன
2013
11:01
வீரவநல்லூர்: வீரவநல்லூர் வீரசாஸ்தா கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் வரும் 23ம்தேதி நடக்கிறது. வீரவநல்லூரில் உள்ள வீர சாஸ்தா கோயிலில் கன்னிவிநாயகர், முருகன், பேச்சியம்மன், சங்கிலிபூதத்தார், தளவாய்மாடன், அக்னிமாடன் உட்பட பரிவார மூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர். இக்கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிகள் நடந்தன. தொடர்ந்து வரும் 23ம்தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜைகள் வரும் 19ம்தேதி துவங்குகிறது. கும்பாபிஷேக நாளான 23ம்தேதி காலை கணபதி பூஜை, சோமகும்பபூஜை, பிம்பசுத்தி, யாகசாலை பூஜை நடக்கிறது. காலை 9 மணிக்கு யாகசாலையிலிருந்து கடங்கள் விமானம் மற்றும் கோபுரங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. 9.30 மணிக்கு விமான மகா கும்பாபிஷேகம், தீபாராதனையும், 10மணிக்கு வீரசாஸ்தா மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சமகால மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனையும், மகா அபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது. யாகசாலை பூஜை காலங்களில் வேதம், ஆகமம், திருமுறை பாராயணங்கள் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை திருவானைக்காவல் சந்திரசேகரசிவாச்சியார் தலைமையில் வேதவிற்பன்னர்கள் நடத்துகின்றனர். ஏற்பாடுகளை வீர சாஸ்தா குல தெய்வ வழிபாடு சேனைத்தலைவர் குடும்பத்தினர் மற்றும் குலதெய்வ வழிபாட்டு குடும்பத்தினர் செய்து வருகன்றனர்.