திருவையாறில் தியாகராஜசுவாமிகளின் 259-வது ஜெயந்தி விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24ஏப் 2026 04:04
தஞ்சாவூர்: திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான சத்குரு தியாகராஜரின் 259 -வது ஜெயந்தி விழா இன்று தியாகராஜசுவாமிகளின் ஜீவ சமாதியில் நடைபெற்றது. இதையொட்டி காலை முதல் அபிஷேகம் அலங்காரமும், மகா தீபாராதனைகளை பரம்பரை பூஜா ஸ்தானிகர் தியாகராஜ சர்மா செய்தார். தியாகராஜரின் ஜெயந்தியை முன்னிட்டு ஏராளமன கர்நாடக இசைக்கலைஞர்கள், வித்வான்கள் தியாக பிரும்மத்தின் பஞ்சரத்தின கீர்த்தனைகள், சம்பிரதாய கீர்த்தனைகளுடன் இரவு வரை இசைக் கலைஞர்கள், தியாகராஜருக்கு இசையஞ்சலி செலுத்தினர். பின்னர் ஆஞ்சநேயர் உற்சவத்துடன் ஜெயந்தி விழா நிறைவடைந்தது.விழாவில் பத்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் ஏராளமான கர்நாடக , இசைக் கலைஞர்கள் வித்வான்கள் , பக்தர்கள் கலந்து கொண்டனர்.