Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை வீர அழகர் கோயிலில் ... மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பறவைகாவடி, கரக உற்சவம் மகாசக்தி மாரியம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீட்டணஞ்சேரி காலீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சீட்டணஞ்சேரி காலீஸ்வரர் கோவிலில் தேர் திருவிழா கோலாகலம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2026
03:04

 உத்திரமேரூர்: சீட்டணஞ்சேரி காலீஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம் விழா இன்று கோலாகலமாக நடந்தது.


உத்திரமேரூர் ஒன்றியம், குருமஞ்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட சீட்டணஞ்சேரி கிராமத்தில், ஹிந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டிலான சிவகாம சுந்தரி உடனுறை காலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் 16 நாட்கள் உத்சவம் நடப்பது வழக்கம். விழாவின் போது கடந்த ஆண்டுகளில் தேரோட்டம் நடந்து வந்தது. இடையில் தேர் பழுது மற்றும் நிர்வாக சீர்கேடு போன்றவையால் பல ஆண்டுகளாக தேரோட்டம் இல்லாமல் சித்திரை விழா மட்டும் நடந்து வந்தது. இதனிடையே, இக்கோவிலில் 36 அடி உயரம் கொண்ட புது மரத்தேர் செய்யப்பட்டு கடந்த 2022ல் தேரோட்டம் நடந்தது. அதை தொர்டந்து கோவில் புனரமைப்பு பணி காரணமாக கடந்த ஆண்டில் சித்திரை விழா நடைபெறவில்லை. இந்நிலையில், கடந்த பிப்., 22ல் மஹா கும்பாபிஷேகத்தை தொடர்ந்து நடப்பாண்டுக்கான சித்திரை பெருவிழா, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் காலை மற்றும் இரவு நேரங்களில் வாகனங்களில் சுவாமி வீதியுலா மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா இன்று நடந்தது. காலை 7:00 மணிக்கு, அலங்கரிக்கப்பட்ட தேரில் சிவகாம சுந்தரியுடன் காலீஸ்வரர் எழுந்தருளினார். அப்போது, பக்தர்கள் தேரின் வடம் பிடித்து அப்பகுதி முக்கிய தெருக்கள் வழியாக இழுத்தனர். இதில், சீட்டணஞ்சேரி சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று தீபம் ஏற்றி வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
இஸ்ரேலில் பிறந்த இளைஞர் ஒருவர், இந்திய குருகுலத்தில் 12 ஆண்டுகள் தங்கி வேதக் கல்வி பயின்று, சனாதன ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar