Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீட்டணஞ்சேரி காலீஸ்வரர் கோவிலில் ... புகழ்பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நிறைவு; யானைகள் வடக்கு நாதர் வணங்கி சென்றன புகழ்பெற்ற திருச்சூர் பூரம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பறவைகாவடி, கரக உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மகாசக்தி மாரியம்மன் கோவிலில் பறவைகாவடி, கரக உற்சவம்

பதிவு செய்த நாள்

27 ஏப்
2026
03:04

ஊட்டி: காத்தாடிமட்டம் அருகே தென்றல் நகர், மகா சக்தி மாரியம்மன் கோவில் 19-ம் ஆண்டு திருவிழா நடந்தது.


நீலகிரி மாவட்டம், காத்தாடி மட்டம் அருகே தென்றல் நகரில் அமைந்துள்ள மகா சக்தி மாரியம்மன் கோவிலில் 19-ம் ஆண்டு திருவிழா கடந்த 23 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. 24ல் அம்மனுக்கு காப்பு கட்டுதல் நடந்தது. அம்மனுக்கு சீர்வரிசை எடுத்தல், ஆற்றங்கரையில் அம்மன் குடியழைத்தல் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அம்மன் கரகம், பறவைக்காவடி, பால்குடம் உற்சவர் ஊர்வலம் அக்னி காவடி எடுத்தல் நடநத்து. அன்னதானம் வழங்கப்பட்டது. சிறுவர்களுக்கான விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இரவு இளம்தென்றல் நேரு இளைஞர் நற்பணி சங்கத்தின் சார்பில் வானவேடிக்கை நடந்தது. இன்று மாவிளக்கு பூஜை, அம்மன் கரகம் ஊர்வலம்,மஞ்சள் நீராட்டு விழா, கரகம் குடிவிடுதல் நிகழ்ச்சிகளுடன் திருவிழா நிறைவடைந்தது. விழாவில் காத்தாடி மட்டம், பரமூலை, பூஞ்சோலை, இந்திரா நகர், பாலகொலா, முதுகுலா, மீக்கேரி, கொடலட்டி, மகாலிங்கம் நகர், தேவர்சோலை கிராம தலைவர்கள், பொது மக்கள் பங்கேற்றனர் விழா ஏற்பாடுகளை, இளந்தென்றல் நேரு இளைஞர் நற்பணி மன்றம், ஊர் பொதுமக்கள், கோவில் கமிட்டி மற்றும் தென்றல் நகர் அனைத்து மகளிர் சுய உதவி குழுவினர் இணைந்து செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar