கோவை மேட்டுப்பாளையம் ரோட்டில் பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில் தண்டு மாரியம்மன் கோயில் உள்ளது. இங்கு கடந்த, 14ம் தேதி விக்னேஸ்வரர் பூஜையுடன் விழா துவங்கியது. அன்று இரவு பூச்சாட்டு விழா நடந்தது. 21ம் தேதி இரவு, 10:00 மணிக்கு பூ கம்பம் போடுதல் நிகழ்ச்சியும், 22ம் தேதி முதல், 26 வரை பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் நடந்தது. இன்று திருக்கல்யாணம் நிகழ்ச்சியும் நாளை செவ்வாய்க்கிழமை இரவு, 7:30 மணிக்கு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடக்கிறது. 29ம் தேதி காலை, 6:00 மணிக்கு சக்தி கரகம் கோயில் வந்தடைதல், தொடர்ந்து, அலங்கார பூஜை, பொங்கல், மா விளக்கு, அக்னி கரகம் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு, 12:00 மணிக்கு பூ கம்பம் அகற்றுதல் நடக்கிறது. 30ம் தேதி வியாழக்கிழமை மஞ்சள் நீர் விழாவும், மே 1ம் தேதி வெள்ளிக்கிழமை காலை, 8:00 மணிக்கு வசந்த பூஜையுடன் விழா நிறைவடைகிறது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தண்டு மாரியம்மன் ஆராதனை மற்றும் வழிபாட்டு அறக்கட்டளை மற்றும் கட்டளைதாரர்கள் செய்து வருகின்றனர்.