திண்டிவனம்: ராஜாம்பேட்டையிலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் திருக்கல்யாணம் நடந்தது.
திண்டிவனம் நகராட்சி 17 வது வார்டிலுள்ள மீனாட்சி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு, மீனாட்சி–சுந்தரேசர் திருக்கல்யாணம் நடந்தது. இதையொட்டி, 7 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணத்தையொட்டி, மீனாட்சி அம்மனுக்கு மாங்கல்யம் அணிவிக்கும் வைபவம் நடந்தது. கவுன்சிலர் ரேணுகாஇளங்கோவன் தலைமையில் நடந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர் . விழாவில் பங்கேற்ற நுாற்றுக்கணக்கான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.