சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரை திருவிழா; மருதாநதியில் இறங்கிய அழகர்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01மே 2026 01:05
பட்டிவீரன்பட்டி; சித்தரேவு வரதராஜபெருமாள் கோவில் சித்திரைத் திருவிழா கொடியேற்றம் ஏப்.20ல் நடந்தது. ஏப்.28ல் திருக்கல்யாணம் நடந்தது. நேற்று வரதராஜபெருமாள் குதிரை வாகனத்தில் சன்னதியிலிருந்து புறப்பட்டு, நேற்று காலை 6:00 மணி அளவில் அய்யம்பாளையம் மருதாநதியில் இறங்கினார். இன்று (மே 2) தசாவதாரம் நடக்கிறது. நாளை (மே 3) கருடாழ்வார் வாகனத்தில் அய்யம்பாளையத்தில் நகர்வலம் வருகிறார். மே 4ல் பூப்பல்லாக்கில் நகர்வலம், மே 5ல் மஞ்சள் நீராடி சன்னதி வந்தடைகிறார்.