Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
வகைவகையான வீணைகள்! ஸ்ரீராமஜெயம் எழுதுவதை ...
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
ஆறு கட்டளை அறிந்த மனமே ஆண்டவன் வாழும் மனம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 ஜன
2013
02:01

*ஒருவர் பாவச் செயல் புரிந்தால் அது பலரையும் பாதிக்கும். அவ்வாறு பாதிக்கப்பட்டவர் களின் நிலைமை காலப்போக்கில் சரியாகி விடும். ஆனால் பாவச்செயல் புரிந்தவரை விட்டு, பாவம் ஒருநாளும் நீங்காது.
*தகுதியற்றவர் களுக்குப் பணம் கொடுத்தல், தகுதி உடையவர்களுக்கு உதவ மறுத்தல்- இந்த இரு நடவடிக்கைகளும் நாம் சம்பாதித்த செல்வத்தைத் தவறாக பயன்படுத்துவதாகவே கருதப்படும்.
*காமம், கோபம், பேராசை ஆகிய மூன்றும் நரகத்தின் வாயில்களாக அமைந்துள்ளன. இவை நம் ஆத்மாவை களங்கப்படுத்தி விடும்.
*வாய்மை, தர்மசிந்தனை, சுறுசுறுப்பு. பொறாமை கொள்ளாது இருத்தல், பொறுமை, மனவலிமை ஆகிய ஆறு பண்புகளையும் கடைபிடிக்க ஆண்டவன் கட்டளையிட்டிருக்கிறான். இவை இருக்குமிடத்தில், ஆண்டவன் குடியிருப்பான்.
*பெண் மோகம், சூதாடுதல், வேட்டையாடுதல், குடிப் பழக்கம், கடுமையான சொற்கள் பேசுதல், மிகையான தண்டனை கொடுத்தல், செல்வத்தை தவறான வழிகளில் செலவழித்தல் ஆகிய ஏழும் பெரும் அழிவை விளைவிக்கக் கூடியவை.
*யார் திமிருடன் நடந்து கொள்வதில்லையோ, பிறரை இகழ்ந்து தன்னை புகழ்ந்து கொள்வதில்லையோ, உணர்ச்சி வசப்பட்டாலும் தன்னை மறந்து பிறரை கடுஞ்சொல் கூறுவதில்லையோ அவர் எல்லோராலும் விரும்பப் படுபவர் ஆகிறார்.
*பிறர் பெற்றுள்ள செல்வம், அழகு, வீரம், குலகவுரவம், மகிழ்ச்சியான வாழ்க்கை, அதிர்ஷ்டம், பட்டம் பரிசுகள் ஆகியவற்றைக் கண்டு ஒருவர் பொறாமைப்பட்டால், வாழ்நாள் முழுவதும் தீராத நோயாளியைப் போல் மனம் புழுங்கியபடி இருக்க நேரிடும்.
*குடிப்பழக்கம் போன்ற போதைகளை விடச் செல்வ மிகுதியால் ஏற்படும் போதை அதிக அபாயம் கொண்டது. செல்வ போதை கொண்டுள்ளவர் தனக்கு பேரழிவு ஏற்பட்ட பிறகுதான் சுயநினைவிற்குத் திரும்புகிறார்.
*அறிவு குழம்பி அதனால் வீழ்ச்சியடையும் தருணம் நெருங்கி விட்டால், ஒருவருக்கு, தான் செய்யும் அநியாயம் எல்லாம் நியாயமாக தோன்றும். தனது அநியாயமான செயல் நியாயமானது என்றும் அவனது உள்ளத்தில் பதிந்திருக்கும்.
*பேசுவதைவிட மவுனமாக இருப்பது சிறந்தது. பேச வேண்டிய அவசியம் ஏற்படும் போது உண்மையே பேச வேண்டும். நாம் பேசும் உண்மை பிறருக்கு நன்மை செய்வதாக அமைய வேண்டும்.
*ஏரி வறண்டு போனால் அன்னப் பறவைகள் வெளியேறி விடுவதைப் போல், ஒருவர் சஞ்சலமான மனதை உடையவராகவும், சுயக்கட்டுப்பாடு அற்றவராகவும், ஆசைகளின் வசப்பட்டவராகவும் இருந்தால், அவருடைய செல்வமும் வசதிகளும் அவரை விட்டு நீங்கி விடும்.
*வாழ்வில் வளமாக இருக்க விரும்புகிறவர், பொருத்தமான உணவையே, தன்னால் சாப்பிடக் கூடிய உணவையே, சாப்பிட்டால் செரிக்கக் கூடியதையே, செரித்தால் நன்மை தரக் கூடியதையே உண்ண வேண்டும் அல்லது ஏற்க வேண்டும்.
*பணிவின் மூலம் அவமானத்தைத் தவிர்க்கலாம். வலிமையின் மூலம் பெரிய துன்பத்தைப் போக்கிக் கொள்ளலாம். பொறுமையின் மூலம் கோபத்தை, கோபப்படுபவர்களை வெல்லலாம். நன்னடத்தையின் மூலம் எல்லா தீய விளைவுகளையும் நீக்கலாம்.

பகிர்க copied
 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »

பலன் உண்டு அக்டோபர் 09,2026

இரண்டு நாடுகளுக்கு இடையே போர் நடந்து கொண்டிருந்தது. தேவ ஊழியர் ஒருவர் எதிரி நாட்டுக்குச் சென்று ... மேலும்
 

பொய் சொல்லாதே அக்டோபர் 09,2026

* எப்போதும் பொய் சொல்லாதே.* பேராசை கொண்டவனுக்கு திருப்தி இருக்காது.      * மனம் போன போக்கில் ... மேலும்
 
சிறையில் ஒரே அறையில் பத்து குற்றவாளிகள் அடைக்கப்பட்டனர். அவர்களிடம், ‘‘உங்களில் யார் தப்பி ஓடினாலும் ... மேலும்
 

வாய்ப்பு அக்டோபர் 09,2026

சகோதரிகளான மேரியும், கியூரியும் நிகழ்ச்சி ஒன்றில் துாரத்து உறவினரை சந்தித்தனர். அவரின் அன்பான ... மேலும்
 

சிக்கிய காதலி அக்டோபர் 09,2026

மரத்தால் ஆன வீட்டில் குடியிருக்கும் ஜப்பானியர் ஒருவர், வீட்டை புதுப்பிக்க எண்ணி மரச்சுவரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar