ரூ. 2.10 கோடியில் ராமேஸ்வரம் கோயில் தீர்த்த பாதை புதுப்பிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02மே 2026 10:05
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ரூ. 2.10 கோடி செலவில் புனித நீராடும் பாதையை புதுப்பிக்கும் பணி நடக்கிறது.
ராமேஸ்வரம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து 22 தீர்த்தங்களை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்கின்றனர். இதில் நீராடும் வழியில் டைல்ஸ்கள் உள்ளதால் பாசிபடிந்து பக்தர்கள் இடறி விழுந்து காயமடைந்தனர். மேலும் 2ம் பிரகாரம் 100 மீ., முழுமைபெறாமல் பல ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இந்நிலையில் பக்தர்கள் நலன் கருதி தீர்த்த பாதையை புதுப்பிக்க ரூ.2.10 கோடியை ஹிந்து அறநிலைத்துறை ஒதுக்கியது. அதன்படி சில நாட்களாக கோயில் வளாகத்தில் உள்ள தீர்த்த பாதையில் உள்ள டைல்ஸ் கல்களை அகற்றி பக்தர்கள் வழுக்கி விலாதபடி பெரிய சைஸில் கிரானைட் கல்கள் பதிக்கும் முழுவீச்சில் நடக்கிறது. மேலும் முழுமைபெறாத 2ம் பிரகார பகுதியில் 100 அடி தூரத்திற்கு அகற்றி, நீராடும் பகுதியில் மேல்தளம் இன்றி காற்றோட்டத்துடன் அமைக்கும் பணி நடக்கிறது. இப்பணி ஓரிரு வாரத்தில் முடிந்ததும், பக்தர்கள் சிரமம் இன்றி நீராடலாம் என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர்.