* பிறருக்கு உதவி செய்தால் துன்பம் குறையும். * நண்பர்களை ஓரளவு விரும்புங்கள். ஏனெனில் அவர்கள் விரோதி ஆகலாம். * எதிரிகளை அதிகம் பகைக்காதீர். ஒருநாள் அவர்கள் நண்பராக மாறலாம். * ஒருவன் அழியும் காலம் நெருங்கினால் அவனிடம் இருந்து வெட்கம் மறையும். * வெட்கத்தை இழந்தவன் நேர்மையை விட்டு மோசடியில் ஈடுபடுவான். * அறிவும், பணமும் குறைகளை மறைக்கும். * அறியாமையும், வறுமையும் குறைகளை வெளிப்படுத்தும். * கல்வியைக் கற்பதோடு மனக் கட்டுப்பாட்டையும் கற்றுக் கொள்ளுங்கள்.