Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மயிலம் முருகன் கோவிலில் திருவோண ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகாபிஷேகம் சிதம்பரம் நடராஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கம்பன் விழா இன்று நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கம்பன் விழா இன்று நிறைவு

பதிவு செய்த நாள்

10 மே
2026
01:05

புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில், நேற்று முன்தினம் துவங்கிய கம்பன் விழா இன்று நிறைவு பெறுகிறது.

விழாவின், 2ம் நாளான நேற்று காலை 9 மணிக்கு கம்பன் போற்றும் (வாய்மை, கடமை வீரம்) எனும் தலைப்பில் இளையோர் அரங்கம் நடந்தது. காலை 10:15 மணிக்கு மாற்றுத்திறன் மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. 10:45 மணிக்கு ‘ராமன் சுக்ரீவனுக்கு வரம் கொடுத்தது குற்றம்’ என்ற தலைப்பில் வழக்காடு மன்றம் நடந்தது. இதில் நடுவராக இலங்கை ஜெயராஜ் பங்கேற்றார்.

பேராசிரியர் சச்சிதானந்தம் முன்னிலை வகித்தார். வழக்கை தொடுப்பவராக பர்வீன் சுல்தானா, மறுப்பவராக சண்முக வடிவேல் பங்கேற்று பேசினர். மாலை 5 மணிக்கு ‘கம்பன் கண்ட மாண்பு’ என்ற கவியரங்கம் நடந்தது. 6:30 மணிக்கு சப்தகிரி சிவக்கொழுந்து, ராமலிங்கம் சகோதரர்கள் அறக்கட்டளை சார்பில் ‘காவியம் போற்றும் மேன்மை’ பட்டிமன்றம் நடந்தது. இதில் சப்தகிரி ராமலிங்கம் தலைமை தாங்கினார்.

நிறைவு நாளான இன்று காலை 9 மணிக்கு ‘கம்பனில் நான் கண்ட’ என்ற தலைப்பில் சிந்தனை அரங்கம் நடக்கிறது. காலை 11 மணிக்கு நீதிபதி சுரேஷ்குமார் ‘தாழ்ந்தோர் உயர்வர்’ என்ற தலைப்பில் தனியுரையும், மாலை 4:30 மணிக்கு இளம்பிறை மணிமாறனின், காரணம் காரியமும் என்ற தலைப்பில் தனியுரை நடக்கிறது. மாலை 6 மணிக்கு நீதிபதிகள் ராமசுப்ரமணியன், ராமலிங்கம், டி.ஐ.ஜி., சத்தியசுந்தரம் ஆகியோர் நடுவர்களாக பங்கேற்கும் முதல் நாள் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு நடக்கிறது.

விழாவில், கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்படுகிறது. ஏற்பாடுகளை கம்பன் கழக நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் 80 சதவீத திருப்பணிகள் நிறைவடைந்துள்ள ... மேலும்
 
temple news
புதுச்சேரி: தர்ம சம்ரக்ஷண சமிதி சார்பில், சாரதா நவராத்தி விழாவின் இரண்டாம் நாள் நிகழ்ச்சி நேற்று ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.புரம்: ஆர்.எஸ்.புரம் காமாட்சி அம்பாள் கோயிலில் நேற்று காலை அம்பாளுக்கு அபிஷேகம், தேவி மஹாத்மிய ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar