Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் நடராஜர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
எழுத்தின் அளவு:
தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து

பதிவு செய்த நாள்

10 மே
2026
01:05

மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் வெளியிட்டுள்ள ஆசியுரையில் கூறியிருப்பதாவது:

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய வாழ்த்துகளும், ஆசிகளும்!

தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தங்களின் ஆட்சி, தமிழக வரலாற்றில் நீங்காத இடம்பிடிக்க எம் மனமார்ந்த வாழ்த்துகள்.

‛வையத்து வாழ்வீர் எனத் தொடங்கி, மன்னுயிர் அனைத்தையும் தன்னுயிர் போல் கருதும் உயரிய அறமே சிறந்த ஆட்சியின் இலக்கணம் அந்த வகையில் சாதி, மத இனப் பாகுபாடுகளைக் கடந்து விளிம்பு நிலை மக்களின் வாழ்வில் ஏற்றம் தரும் உன்னத மக்கள் நாயகராகத் தாங்கள் திகழ வேண்டுகிறோம்.

தன்னால் தன்பரிசனத்தால் ஊனமிகு பகைத்திறத்தால் கள்வரால் உயிர்கள் தம்மால் ஆன ‛பயம் தீர்த்து அறங்காப்பான்" என்ற சேக்கிழார் பெருமானின் புனித வாக்கிற்கிணங்க இயற்கைச் சீற்றங்கள் சமூக விரோதச் செயல்கள் மற்றும் எவ்விதப் பகை உணர்வுகளுமின்றி மக்கள் அச்சமின்றி வாழும் சூழலைத் தாங்கள் உருவாக்கித் தருவீர்கள் என முழுமையாக நம்புகிறோம்.

தமிழக மக்களின் கண்ணும் ஆவியுமாக இருந்து ஒரு தாயின் கனிவோடும் தந்தையின் பொறுப்போடும் அறநெறி தவறாத செங்கோல் ஆட்சியை வழங்க. எல்லாம் வல்ல செந்தமிழ்ச் சொக்கன் திருவருள் தங்களுக்கு என்றும் துணை நிற்கட்டும்.

 தங்கள் அமைச்சரவையும் தங்களுக்கு உற்ற துணையாக நின்று, பொதுநலனை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்பட எம் ஆசிகள் என தனது ஆசியுரையில் தருமபுரம் ஆதீனம் வாழ்த்தியுள்ளார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம், நேற்று ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கம்பன் கலையரங்கத்தில், நேற்று முன்தினம் துவங்கிய கம்பன் விழா இன்று நிறைவு ... மேலும்
 
temple news
மயிலம்: மயிலம் சுப்ரமணியர் சுவாமி கோவிலில் நடராஜர் வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு திருவோண பூஜை ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலுக்கு வார விடு முறையான இன்று பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
காரைக்கால்: திருநள்ளாறு சனி பகவான் கோவிலில் கர்நாடகா துணை முதல்வர் சிவக்குமார் தரிசனம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar