Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கம்பன் விழா இன்று நிறைவு தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து தமிழக முதல்வர் ஜோசப் விஜய்க்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மகாபிஷேகம்

பதிவு செய்த நாள்

10 மே
2026
01:05

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில், சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம், நேற்று நடந்தது.

சிதம்பரம் நடராஜர் கோவில் சித்சபையில் உள்ள மூலவரான சிவகாமசுந்தரி, நடராஜருக்கு ஆண்டுக்கு, ஆறு முறை மகாபிஷேகம் நடக்கிறது. இதில், ஆனி திருமஞ்சனம், மார்கழி திருவாதிரை தரிசன காலங்களில் மட்டும் அதிகாலையில், ஆயிரங்கால் மண்டப முகப்பிலும், மற்ற நான்கு மாதங்களில் மாலை வேளையில், சித்சபையின் முன்பு கனசபையிலும் மகாபிஷேகம் நடக்கிறது.

அந்த வகையில் சித்திரை மாத மகாபிஷேகம் நேற்று நடந்தது. அதையொட்டி, நேற்று காலை நடராஜருக்கு ஏககால லட்சார்ச்சனையும், யாகசாலையில் கடஸ்தாபனம், மகா ருத்ர பாராயணம் தொடங்கி மாலை வரை நடந்தது.

மாலை மகா ருத்ர ஹோமம், வஸோதாரா ஹோமம், மகா ருத்ர பூர்ணாஹுதி, மகா தீபாராதனை நடந்தன. தொடர்ந்து வடுக, கன்யா, சுவாசினி, தம்பதி, கோ, அஸ்வ, கஜ பூஜைகள், மஹா பூர்ணாஹுதி, மகா தீபாராதனையும், மாலை 6:00 மணிக்கு மேல் யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு செய்து, சித்சபை முன் கனகசபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடைபெற்றது.

ஏற்பாடுகளை பொது தீட்சிதர்களின் செயலர் ஜெயசூர்யா தீட்சிதர், துணை செயலர் கணபதி சுப்பிரமணிய தீட்சிதர் மற்றும் பொது தீட்சிதர்கள் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புரட்டாசியில் தேவியை கலைமகள், அலைமகள், மலைமகள் என்னும் மூன்று அம்சங்களில் வழிபடுகிறோம். இராமன் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 
temple news
குளித்தலை: தோகைமலையில், பழமை வாய்ந்த மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், நீதிமன்ற உத்தரவால், பழைய முருகன் ... மேலும்
 
temple news
சென்னை: தமிழக கோயில்களில் மொபைல் போன்களை எடுத்துச் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar