மாணவன் ஒருவனின் பேனாவைக் காணவில்லை. அருகில் உள்ள மாணவன் தான் எடுத்திருப்பான் என எண்ணி ஆசிரியரிடம் புகார் சொன்னான். அதைக் கேட்ட ஆசிரியரும் விசாரிக்காமல் குறிப்பிட்ட மாணவனுக்கு தண்டனை கொடுத்தார்.
ஆனால் மறுநாளோ... பேனா கிடைத்து விட்டது. இதையறிந்த ஆசிரியர் தண்டனை பெற்றவனிடம், ‘பேனாவை எடுக்கவில்லை’ என சொல்லியிருக்கக் கூடாதா எனக் கேட்டார். அதற்கு அவன், ‘தாங்கள் தான் விசாரிக்கவில்லையே’ என்றான். மீண்டும் ஆசிரியர், ‘அடிக்கும் போதாவது சொல்லி இருக்கலாமே’ என்றார். அதற்கு ‘தண்டனைக்கு பயந்தவன் என என்னை நீங்கள் நினைத்து விடக் கூடாது என்பதால் வாய் திறக்கவில்லை’ என்றான்.
அந்த சிறுவன் யார் தெரியுமா... போரில் வெற்றிகளைக் குவித்த நெப்போலியன்.