பதிவு செய்த நாள்
21
ஜன
2013
11:01
பேரூர்: மழை வேண்டியும், உலக நலனுக்காகவும், ஸ்ரீவீரமாஸ்த்தியம்மன் கோவிலில் வேள்வி வழிபாடுகள் நாளை நடக்கிறது.பேரூர் அருகே பச்சாபாளையத்தில் 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த ஸ்ரீவீரமாஸ்த்தியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவராத்திரி நாளில், சுற்றுவட்டாரப் பகுதியிலிருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு, குண்டம் இறங்கி அம்மனை வழிபடுவது வழக்கம்.இக்கோவிலில், மழைவேண்டியும், உலக நலனுக்காகவும் வேள்வி வழிபாடுகள் நாளை நடக்கிறது. நாளை(22ம்தேதி) மாலை 5.00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் விழா துவங்குகிறதுதொடர்ந்து, உலக நலனுக்காகவும், மழை வேண்டியும் வேள்வி பூஜைகள் நடக்கிறது. மறுநாள், காலை 6.00 மணிக்கு வேள்வி பூஜைகளும், கோபூஜையும் நடக்கிறது. தொடர்ந்து, வீரமாஸ்த்தி அம்மனுக்கு அபிஷே அலங்காரம் நடத்தப்பட்டு, மகாதீபாராதனை நடக்கிறது. இறுதியில், 9.30 மணிக்கு, அன்னதானம் நடக்கிறது. வேள்வி பூஜைகள், பேரூர் ஸ்ரீலஸ்ரீ ஞான சிவாச்சாரியார் சாமிகள் தலைமையில் நடக்கிறது. ஏற்பாடுகளை, வீரமாஸ்த்தியம்மன் பரிபாலன சபை செய்துள்ளது.