Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த ... பூலோகநாதர் கோவிலில் சொர்ண பைரவருக்கு சிறப்பு வழிபாடு பூலோகநாதர் கோவிலில் சொர்ண ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அங்காள ஈஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
அங்காள ஈஸ்வரி கோவிலில் தீமிதி திருவிழா வெகு விமரிசை

பதிவு செய்த நாள்

18 மே
2026
10:05

எண்ணுார்: பர்மா நகர் அங்காள ஈஸ்வரி கோவில் தீமிதி திருவிழாவில், 1,200க்கும் மேற்பட்ட பக்தர்கள், தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.


எண்ணுாரில், பர்மா தமிழர்கள் வசிக்கும், அன்னை சிவகாமி நகர் எனும் பர்மா நகரில், 60 ஆண்டுகள் பழமையான பீலிக்கான் முனீஸ்வரர் – அங்காள ஈஸ்வரி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், தீமிதி திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, 60ம் ஆண்டு தீமிதி திருவிழா நேற்றிரவு நடந்தது. 200க்கும் மேற்பட்ட பெண்கள், முளைப்பாரி சட்டியை தலையில் சுமந்தபடி அணிவகுக்க சுவாமி புறப்பாடாகின. கடலில் புனித நீராடிய பக்தர்கள், மேள தாளங்கள் முழங்க மருளாடினர். பின், அலகு, ராட்சத அலகு, மணி வேல், துாக்க நேர்ச்சை அணிந்தும், முதுகில் அலகு குத்தியபடி, ஆட்டோ, தேங்காய் உள்ளிட்டவற்றை ஊர்வலமாக இழுத்து வந்தனர். மேலும், பக்தர்கள் சிலர், பிரமாண்ட அக்னி சட்டிகளை கையில் ஏந்தியும், ஆண்கள் சிலர், பெண் வேடம், கருப்பசாமி, முனீஸ்வரர், சுடலை மாட சுவாமி உட்பட பல்வேறு தெய்வங்கள் வேடமணிந்தும் கோவிலை நோக்கி, படையெடுத்தனர். நிறைவாக, கோவில் வளாக மைதானத்தில் ஏற்படுத்தப்பட்டிருந்த அக்னி குண்டத்தில், ஆக்ரோஷமாக மருளாடியடி, 1,200க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். 20,000க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று சுவாசி தரிசனம் செய்தனர். திருவிழாவை முன்னிட்டு, வடசென்னையில் அதிக மக்கள் கூடும் திருவிழா என்பதால், பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதேபோல, விபத்து அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க பாரதியார் நகர் – கத்திவாக்கம் மேம்பாலம் வரையிலான, எண்ணுார் விரைவு சாலையில், போக்குவரத்து தடை செய்யப்பட்டிருந்தது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar