மேல்மருவத்துார் வரசித்தி விநாயகர் கோவிலில் வருஷாபிஷேக விழா விமரிசை
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20மே 2026 09:05
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் அருகே கிழ்மருவத்துார் பாரதியார் நகரில் உள்ள வரசித்தி விநாயகர் கோவிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா விமரிசையாக நேற்று நடந்தது.
வருஷாபிஷேகத்தை முன்னிட்டு வரசித்தி விநாயகர் கோவிலில் நேற்று மாலை அனுக்ஞை, சங்கல்பம், கும்பபூஜை, ஹோமம், சிறப்பு அபிஷேகம், 108 சங்காபிஷேகம் நடந்தது. கோவில் விமானம், மூலஸ்தானத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. மாலை 7 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், சகஸ்ரநாம அர்ச்சனை, புஷ்பாஞ்சலி, தீபாராதனை நடந்தது. இவ்விழாவினை ஆலய தலைவர் மோகன், ஆலய நிர்வாகிகள் மற்றும் பாரதியார் நகர் பகுதி மக்கள் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர்.