Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  விருதுநகர் வெயிலுகந்தம்மன் ... வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்ஸவ கொடியேற்றம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடபழனி ஆண்டவர் கோவிலில் வைகாசி பிரமோற்சவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

21 மே
2026
11:05

சென்னை: வடபழனி முருகன் கோவிலில், வைகாசி விசாக பிரம்மோத்சவ விழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமியை தரிசித்தனர். 


சென்னை, வடபழனி முருகப்பெருமான் கோவிலில், வைகாசி விசாகத்தை முன்னிட்டு, 10 நாள் பிரம்மோத்சவ விழா இன்று தொடங்கியது. இதை முன்னிட்டு, நேற்று மாலை மூஷிக வாகன புறப்பாடு நடந்தது.   பிரம்மோத்சவத்தின் முதல் நாளான இன்று காலை 7:35 மணி முதல் 9:00 மணிவரை துவஜா ரோஹணம் எனும் கெடியேற்ற வைபவம் நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, ‘அரோகரா’ கோஷமிட்டனர். பின், முருகப்பெருமானை தரிசித்தனர்.  அதைத் தொடர்ந்து, மங்கள கிரி விமான புறப்பாடு நடந்தது. இரவும் மங்களகிரி விமானத்தில் வள்ளி தெய்வயானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடந்தது.  விழாவின் இரண்டாம் நாளான நாளை காலை, சூரிய பிரபை புறப்பாடு, இரவு சந்திர பிரபை புறப்பாடும் நடக்கிறது. வரும், 23ம் தேதி இரவு 7:00 மணிக்கு ஆட்டுக்கிடா வாகனத்தில் வள்ளி தேய்வயானை சமேத சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. அடுத்த நாள், நாக வாகனத்தில் சுப்பிரமணியர் அருள்பாலிக்கிறார். பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 25ம் தேதியும், அடுத்தநாள் இரவு யானை வாகன புறப்பாடும் நடக்கிறது.


பிரம்மோத்சவத்தின் முக்கிய நாளான, 27ம் தேதி காலை தேர் திருவிழா நடக்கிறது. அன்று காலை 7:05 மணி முதல் 7:25 மணிக்குள் பக்தர்களால் தேர் வடம் பிடித்து இழுக்கப்படுகிறது. இரவு ஒய்யாளி உற்சவம் நடக்கிறது. குதிரை வாகன புறப்பாடு, 28ம் தேதி நடக்கிறது. 29ம் தேதி இரவு 7:00 மணிக்கு வடபழனி முருகன் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். வைகாசி விசாகமான, 30ம் தேதி காலை 7:35 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சண்முகர் விதி உலா நடக்கிறது. காலை 9:00 மணிக்குள் தீர்த்தவாரி உற்சவமும், கலசாபிஷேகமும் நடக்கிறது. அன்று இரவு 7:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. பின், சுப்பிரமணியர் வீதி உலாவை அடுத்து, கொடியிறக்கத்துடன் பிரம்மோத்சவ விழா நிறைவு பெறுகிறது. வரும், 31ம் தேதி இரவு விசேஷ புஷ்ப பல்லக்கு புறப்பாடு, சுப்பிரமணியர் வீதி உலா நடக்கிறது. வைகாசி விசாக பிரம்மோத்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சிகள் வரும், ஜூன் 1ம் தேதி முதல், 10ம் தேதி வரை தினமும் மாலை நடக்கிறது. இதில், பரதநாட்டியம், சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி, வீணை கச்சேரி, இசை சொற்பொழிவு ஆகியவை நடக்கின்றன.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar