குன்றத்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் பாதயாத்திரை சென்று வழிபாடு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22மே 2026 06:05
குன்றத்தூர் முருகன் கோவிலில் திருமுருகன் வள்ளி வம்சா வழியினர் வழிபாட்டு முறைப்படி மலைக்குறவன், குறவன் குறுமான்ஸ், டி என் சி குறவர் சமுதாயம் நான்காம் ஆண்டு குறிஞ்சி பெருமுருக திருவிழா நடத்தினர். இதில் வள்ளிக்கு தேன், திணை மாவு, மா, பல, வாழைப்பழ முக்கனிகள் குன்றத்தூர் சிவன் கோவில் குளக்கரையில் இருந்து மயிலாட்டம் ஒயிலாட்டம் தாரை தப்பட்டை மேளம் தாளத்துடன் குன்றத்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு பாதயாத்திரை சென்று வழிபட்டனர்.