Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கண்டவராயன்பட்டியில் வைகாசி ...  குருவாயூர் கோவிலில் முதலமைச்சர் வி.டி. சதீசன் தரிசனம்: துலாபாரம் நேர்த்திக்கடன் குருவாயூர் கோவிலில் முதலமைச்சர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நரசிம்ம பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவம் சுவாமி புறப்பாடு நேரத்தில் தொடரும் நெரிசல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
நரசிம்ம பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவம் சுவாமி புறப்பாடு நேரத்தில் தொடரும் நெரிசல்

பதிவு செய்த நாள்

24 மே
2026
07:05

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவிலில் உள்ள பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் பிரம்மோத்சவத்தில், சுவாமி புறப்பாடு நேரத்தில் வாகனங்கள் குறுக்கிடுவதால் பக்தர்கள் அவதியடைந்து வருகின்றனர்.

சிங்கபெருமாள் கோவில் – அனுமந்தபுரம் சாலையில், அஹோபிலவல்லி தாயார் உடனுறை பாடலாத்ரி நரசிம்ம பெருமாள் கோவில் உள்ளது. இக்கோவில், பல்லவர் காலத்தில் கட்டப்பட்ட குடைவரை கோவில். இது, ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இங்கு, ஆண்டுதோறும் வைகாசி பிரம்மோத்சவம் 10 நாட்களும், தொடர்ந்து 3 நாட்கள் விடையாற்றி உத்சவமும் விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டிற்கான வைகாசி பிரம்மோத்சவ கொடியேற்றம், 21ம் தேதி காலை நடந்தது. தொடர்ந்து, நேற்று முன்தினம் காலை கருட சேவையும், மாலை அனுமன் வாகனத்தில் சுவாமி புறப்பாடும், வாண வேடிக்கைகள் மற்றும் மங்கல வாத்தியம் முழங்க நான்கு மாட வீதிகளில் நடந்து வருகின்றன. இந்நிலையில், நான்கு மாடவீதிகளான அனுமந்தபுரம் சாலை, ஜி.எஸ்.டி., சாலை, மண்டபத்தெரு உள்ளிட்ட பகுதிகளில், சாலையை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதாலும், எதிர் திசையில் வரும் வாகன ஓட்டிகளாலும், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் தவிக்கின்றனர்.

இதுகுறித்து பக்தர்கள் கூறியதாவது: மாலை நேர சுவாமி புறப்பாடு நேரத்தில், வழக்கமாக அனுமந்தபுரம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு மண்டபத்தெரு வழியாகவும், மண்டபத்தெருவில் சுவாமி வரும் போது அனுமந்தபுரம் சாலையிலும், வாகன போக்குவரத்து மாற்றம் செய்யப்படும். இந்த ஆண்டு, அதுபோல மாற்றம் செய்யப்படவில்லை. இதன் காரணமாக, பக்தர்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வருகிறது. நேற்று மாலை, அனுமன் வாகன புறப்பாடு நடந்தபோது, பாதம் தாங்கிகள் மீது இருசக்கர வாகன ஓட்டி மோதியதால் சலசலப்பு ஏற்பட்டது. இந்த ஆண்டு, போலீசார் முறையாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு, போக்குவரத்தை சீரமைக்கவில்லை. கோவில் பகுதியில் சிறிது நேரம் மட்டுமே பணியில் உள்ளனர். எனவே, மாடவீதிகளை சுற்றி சாலையில் நிறுத்தப்படுள்ள வாகனங்களை அகற்றி, எவ்வித இடையூறும் இல்லாமல், பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி;  அனந்த பத்மநாப விரதத்தையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை காலை திருமலையில் உள்ள சுவாமி ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: இலங்கை தலைமன்னாரில் இருந்து கடலில் உள்ள ராமர் பாலத்தை சுற்றுலா படகில் கண்டு தரிசிக்க ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுப்ரமணிய சுவாமி கோவிலில், வளர்பிறை சதுர்த்தசி திதியையொட்டி நடராஜருக்கு ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: புகழ் பெற்ற வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி கோவிலுக்கு, 23 ஆண்டுகளுக்குப் பிறகு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar