ஓரிக்கையில் மஹா சண்டியாகம்; காஞ்சி சங்கராச்சாரியார் சுவாமிகள் பங்கேற்பு
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25செப் 2026 05:09
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் அடுத்த ஓரிக்கை மணிமண்டபத்தில் உலக நலன் மற்றும் ஆன்மிக செழிப்பு வேண்டி, சிறப்பு பூஜைகளுடன் மஹா சண்டியாகம் இன்று நடைபெற்றது. இதில், காஞ்சி சங்கராச்சாரியார்கள் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்ய சந்திர சேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் பங்கேற்று அருளாசி வழங்கினர். இந்த மஹா சண்டியாகத்தையொட்டி, ஓரிக்கை மணிமண்டப வளாகத்தில் கணபதி ஹோமம், நவகிரக ஹோமம் மற்றும் மகா சண்டி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு யாகங்கள் நடத்தப்பட்டன. யாகசாலைகளில் வைக்கப்பட்ட கலசங்களுக்கும், யாக குண்டங்களில் எரியும் புனித தீபத்திற்கும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெற்றபோது, காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் சத்ய சந்திரசேகரேந்திர சுவாமிகள் ஆகியோர் பூரணாஹூதி கொடுத்து, பக்தர்களுக்கு அருளாசி வழங்கினர்.