Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொத்தமங்கலம் முத்துமாரியம்மன் ...  திருவொற்றியூர் கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோத்சவ விழா  திருவொற்றியூர் கல்யாண வரதராஜ ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
களைகட்டுகிறது தேர்த்திருவிழா; பூத வாகனத்தில் சோமாஸ்கந்தர் சந்திர பிரபையுடன் வீரராகவர்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
களைகட்டுகிறது தேர்த்திருவிழா; பூத வாகனத்தில் சோமாஸ்கந்தர் சந்திர பிரபையுடன் வீரராகவர்

பதிவு செய்த நாள்

25 மே
2026
10:05

திருப்பூர்; திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வர சுவாமி மற்றும் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா, பக்திப் பரவசத்துடன் களைகட்டி வருகிறது. திருவிழா இரண்டாம் நாளான நேற்று காலை 10:00 மணியளவில், விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில் வீற்றிருக்கும் விநாயகர், சோமாஸ்கந்தர், சூலதேவர் மற்றும் விசாலாட்சி அம்மனுக்குச் சிறப்பு அபிஷேகங்களும் மகாதீபாராதனைகளும் விமரிசையாக நடைபெற்றன.

மாலையில் யாகசாலையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்கச் சிறப்பு யாகபூஜைகளைச் செய்து தீபாராதனை காட்டினர். மாலை 6:30 மணியளவில் கண்கவர் அலங்காரத்தில் சோமாஸ்கந்தர் பூத வாகனத்திலும், விசாலாட்சி அம்மன் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி, மங்கள வாத்தியங்கள் முழங்கத் திருவீதியுலா வந்து பக்தர்களுக்குக் காட்சியளித்தனர்.  ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவிலில் நேற்று காலை சூரியபிரபை வாகன காட்சியும், மாலையில் சந்திரபிரபை வாகன காட்சியும் பக்தி சிரத்தையுடன் நடைபெற்றன. ஸ்ரீதேவி, பூதேவி சமேத வீரராகவப்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவில் பெருமாள் கோவில் மேடையில் திருப்பூர் ஸ்ரீவாரி டிரஸ்ட், மாவட்ட தேவர் பேரவை மற்றும் அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில், வீரமணி ராஜூ மற்றும் அபிஷேக் ராஜூ குழுவினரின் பக்திப் பாடல் இன்னிசை நிகழ்ச்சி அரங்கேறியது. திரளான பக்தர்கள் திரண்டு வந்து இசை மழையிலும், சுவாமி தரிசனத்திலும் திளைத்தனர். முக்கிய நிகழ்வாக, வரும் மே 28-ம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் 63 நாயன்மார்களுக்கு அருட்காட்சி அளிக்கும் புறப்பாடும், 29-ம் தேதி திருக்கல்யாண உற்சவமும் நடைபெற உள்ளன. வரும் 30-ம் தேதி விநாயகர், விஸ்வேஸ்வரர் தேரோட்டமும், 31-ம் தேதி வீரராகவப்பெருமாள் தேரோட்டமும் வெகுவிமரிசையாக நடைபெற உள்ளதால் ஒட்டுமொத்த திருப்பூரும் ஆன்மிகக் கோலாகலத்தில் மூழ்கியுள்ளது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அசுரனுடன் போரிட்டு அவனை ஆட்கொண்டார். அவனை இருகூறாகப் பிளந்தவர் சேவலாகவும், மயிலாகவும் மாற்றி தன்னுடன் ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர்  கந்தசஷ்டி திருவிழா நாளை தொடங்குகிறது. ஏராளமான பக்தர்கள் குவிந்து ... மேலும்
 
temple news
வேலூர்: ஸ்ரீபுரம் லட்சுமி நாராயணி தங்க கோவிலில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, உலக நன்மைக்காகவும் ... மேலும்
 
temple news
செஞ்சி: விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நேற்று  இரவு ஐப்பசி மாத அமாவாசையை ... மேலும்
 
temple news
பூரி: ஒடிசா மாநிலம் பூரியில் அமைந்துள்ள புகழ்பெற்ற ஸ்ரீ ஜெகந்நாதர் கோயிலில், இன்று அதிகாலை நடைபெற்ற ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar