மயிலம்: மயிலம் அடுத்த தென் கொளப்பாக்கம் செங்கழுநீர் அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா நடந்தது.
கடந்த 21ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. கடந்த 24ம் தேதி காத்தான் கழுமரம் ஏறும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் மஞ்சள்நீர் உற்சவம் நடந்தது. செங்கழுநீர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்திருந்தனர்.