Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் பொங்கல் ...  திருப்பூரில் கோடை கால சிறப்பு ஆன்மிக பண்பாட்டு பயிற்சி திருப்பூரில் கோடை கால சிறப்பு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனமின்றி ஆன்மிக பணி தொய்வு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 கோயில்களில் அறங்காவலர்கள் நியமனமின்றி ஆன்மிக பணி தொய்வு

பதிவு செய்த நாள்

28 மே
2026
11:05

திருவாடானை: திருவாடானை தாலுகாவில் உள்ள பெரும்பாலான கோயில்களில் அறங்காவலர்கள் நியமிக்காததால் ஆன்மிக பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

திருவாடானை தாலுகாவில் பழமையும், பெருமையும் வாய்ந்த ஏராளமான கோயில்கள் அமைந்துள்ளன. இதில் பெரும்பாலான கோயில்கள் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றன.  கடந்த சில ஆண்டுகளாகவே இங்குள்ள பெரும்பாலான கோயில்களில் அறங்காவலர் குழுக்கள் நியமிக்கப்படவில்லை. கோயில்களில் திரு விழாக்கள் நடத்துவது தினசரி பூஜைகளை முறைப்படுத்துவது, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது மற்றும் கும்பாபிேஷகம் போன்ற திருப்பணிகள் செய்வதில் அறங்காவலர்களின் பங்கு முக்கியமானது.ஆனால் அறங்காவலர்கள் இல்லாததால் வளர்ச்சி பணிகளை முறையான முடிவுகளை எடுக்க முடிவதில்லை. இதனால் சில கோயில்களில் திருப்பணிகள் நடைபெறாமல் உள்ளது. இதனால் ஆன்மிக பணிகள் முடங்கும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இது குறித்து பக்தர்கள் கூறுகையில், கோயில்களில் முறையான நிர்வாகத்திற்கும் ஆன்மிக பணிகள் தொய்வின்றி நடப்பதற்கும் அறங்காவலர்களின் பங்களிப்பு மிகவும் அவசியம். ஆகவே ஹிந்து சமய அறநிலையத்துறையினர் தகுதியானவர்களை அறங்காவலர் பணியிடங்களில் நியமிக்க வேண்டும் என்றனர். இது குறித்து ஹிந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் கூறுகையில், இத்தாலுகாவில் ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமாக 130 கோயில்கள் உள்ளன. அறங்காவலர்கள் இல்லாத கோயில்கள் விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் அனைத்து கோயில்களுக்கும் அறங்காவலர்கள் நியமிக்கப் படுவார்கள் என்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 
temple news
பண்ருட்டி: சரநாராயண பெருமாள் கோவிலில் இன்று அமாவாசை முன்னிட்டு உற்சவர் திருக்கண்ணாடி அறையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர், பெரியகோவிலில், ராஜராஜசோழனின் 1041ம் சதய விழா முன்னிட்டு, பந்தக்கால் நடப்பட்டது. ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
உளுந்தூர்பேட்டை: பாதூர் ஸ்ரீ பிரத்யங்கரா தேவி அம்மன் கோவிலில் அமாவாசை நிகும்பலா யாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar