பதிவு செய்த நாள்
22
ஜன
2013
11:01
சென்னை: சென்னையில், பல்வேறு பகுதிகளில் உள்ள நான்கு கோவில்களில், நாளை, குடமுழுக்கு நடக்கிறது.சைதாப்பேட்டை முச்சந்தி சித்தி விநாயகர் மற்றும் சிவசுப்பிரமணிய சுவாமி கோவில், புது வண்ணாரப்பேட்டை சிவசங்கர விநாயகர் கோவில், திருவொற்றியூர் பொன்னியம்மன் கோவில், பாரிமுனை காளிகாம்பாள் கோவில் ஆகியவற்றின் குடமுழுக்கு, வரும், 23ம் தேதி, காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. இதில், அமைச்சர்கள், இந்து சமய அறநிலைய துறை அதிகாரிகள், கோவில் அறங்காவலர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.