உடுமலைப்பேட்டை: உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி மலை உலக சமாதான ஆலயத்தில் சர்வதேச பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தளி பேரூராட்சி தலைவி தெய்வநாயகி, தங்கவேல் சுவாமி, கவிஞர் வேல்சாமி கவுண்டர் முன்னிலையில் பல்வேறு நாடுகளின் சீடர்கள் சார்பில் பொங்கல் இடைப்பட்டது. குருமாதா சூரிய கடவுளுக்கு பூஜை நடத்தி தீபாராதனை காட்டினார். தொடர்ந்து, சிங்கப்பூர் மூத்த பத்திரிகையாளர் வெ.புருஷோத்தமனை நடுவராக கொண்டு சிறப்பு பட்டிமன்றம் நடைபெற்றது. மகரிஷி பரஞ்சோதியார் அனைவரையும் ஆசிர்வதித்தார். உலக சமாதான ஆலய செயலாளர் கே.எஸ்.சுந்தரராமன் அனைவரையும் வரவேற்றார்.