Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பந்தலூர் முருகன் கோவில் ... நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கத்தி போடும் திருவிழா; பக்தர்கள் பக்தி பரவசம் நரசிம்மநாயக்கன்பாளையத்தில் கத்தி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
எமனேஸ்வரத்தில் குடி கொண்ட காஞ்சி வரதராஜ பெருமாள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
எமனேஸ்வரத்தில் குடி கொண்ட காஞ்சி வரதராஜ பெருமாள்

பதிவு செய்த நாள்

29 மே
2026
04:05

பரமக்குடி: பரமக்குடி நகராட்சி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயில் காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் போன்று சிறப்பு வாய்ந்ததாகும். வேகவதி என்னும் வைகை நதியின் வடபுறத்தில் மல்லிகார்சுனபுரம் என்றும், எமன் ஈஸ்வரனை பூஜித்து சாப விமோசனம் பெற்றதால் எமனேஸ்வரம் என்ற பெயருடனும் இப்பகுதி வழங்குகிறது. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்த நயினார்கோவில் வரலாற்றில், பொதிகை மலையை கடக்க அகத்தியர் சென்றபோது எமனேஸ்வரமுடையவரை வணங்கி சென்றதாக வரலாறு கூறுகிறது. 500 ஆண்டுகளுக்கு முன்பு சவுராஷ்டிர மகான் சுகந்த தூப தீர்த்தார்ய சுவாமிகள் எமனேஸ்வரத்தில் தங்கி பக்தி பரப்பியதாக வரலாறு உள்ளது. இதுபோன்ற பெருமை பெற்ற எமனேஸ்வரத்தில் ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலை உருவாக்கி சவுராஷ்டிர சபையினர் நிர்வகித்து வருகின்றனர். பட்டு நூல்காரர்கள் என்ற சிறப்பு பெயருடன் பட்டு உற்பத்தியில் முதன்மை பெற்றவர்களாக திகழ்கின்றனர். கோயிலில் வைகாசி பிரம்மோற்ஸவம் பத்து நாட்களுக்கு சிறப்பாக கொண்டாடி வந்தனர். மேலும் மதுரை சித்திரை திருவிழா போன்று வைகாசி மாதம் விசாகத்தை மையமாக வைத்து வசந்த உற்ஸவம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருமாள் கள்ளழகர் திருக்கோலத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளி தசாவதார காட்சிகளில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். 


வரதராஜ பெருமாள் பிரதிஷ்டை:  இக்கோயிலின் அர்ச்சகரின் கனவில் பெருமாள் தோன்றி அருளியபடி, பரமக்குடி அருகே உள்ள கால்வாயில் காஞ்சி வரதராஜ பெருமாளை போன்று ஒரு சிற்பம் காணப்பட்டது. 1932ம் ஆண்டு பெருமாள் பிரதிஷ்டை செய்யப்பட்டார். கிழக்கு நோக்கி அமைந்துள்ள கோயிலின் முன்பு காவல் தெய்வம் கருப்பணசாமி அருள்பாலிக்கிறார். சவுராஷ்டிர மகா ஜனங்களின் ஒத்துழைப்புடன் கர்ப்பகிரகம், அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஆறுகால்மண்டபம், கருட மண்டபம், பெருந்தேவி தாயார் சன்னதி, வரதராஜ பெருமாள் புண்ணிய கோடி விமானம் கட்டி 1947ம் ஆண்டு ஸ்ரீ பெருந்தேவி வரதராஜ பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது.  தொடர்ந்து 2002ம் ஆண்டு ராஜகோபுரம் கட்ட வாஸ்து நடந்து 2006 ஜூலை மாதம் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. எமனேஸ்வரம் ராஜகோபுரம் கும்பாபிஷேகம் மலரில் இத்தகவல் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இதேபோல் தொடர்ந்து பல்வேறு திருப்பணிகளை எமனேஸ்வரம் சவுராஷ்டிர சபை நிர்வாகிகள் செய்துள்ளனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; உலகப் பிரசித்தி பெற்ற மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலில் நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான இன்று ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பிரமாண்ட கொலுவுடன் வழிபாடு தொடங்கி நடந்தது.சிதம்பரம் நடராஜர் ... மேலும்
 
temple news
மைசூரு: உலக பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா கோலாகலமாக துவங்கியது.கர்நாடக மாநிலம் மைசூரில், நவராத்திரி ... மேலும்
 
temple news
தி.நகர்: சிருங்கேரி பாரதி வித்யாஸ்ரமத்தில், நவராத்திரி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.சென்னை, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar