Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடைக்கானல் குறிஞ்சி ஆண்டவர் ... வைகாசி விசாகம்; திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்.. அரோகரா கோஷத்துடன் பரவசம் வைகாசி விசாகம்; திருப்பரங்குன்றம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உண்மையை நிலைநிறுத்துவதே சனாதன தர்மத்தின் தனிச்சிறப்பு சிருங்கேரி ஜகத்குரு அருளுரை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
 உண்மையை நிலைநிறுத்துவதே சனாதன தர்மத்தின் தனிச்சிறப்பு சிருங்கேரி ஜகத்குரு அருளுரை

பதிவு செய்த நாள்

29 மே
2026
11:05

 திருப்பூர்: அறிவுத்தேடலை ஊக்குவிப்பதும், தர்க்க ரீதியான விவாதங்களின் வழியாக உண்மையை நிலைநாட்டுவதுமே சனாதன தர்மத்தின் தனிச்சிறப்பு எனச் சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம் அருளுரை வழங்கினார்.

நேபாளத்தில் விஜய யாத்திரை மேற்கொண்டுள்ள சிருங்கேரி ஜகத்குரு ஸ்ரீஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானம், அங்குள்ள பல்வேறு ஆன்மிகக் கூட்டங்களில் அருளுரை வழங்கி வருகிறார். அங்கு அவர் ஆற்றிய அருளுரை:

சனாதன தர்மம் என்பது வெறும் நம்பிக்கைகளின் தொகுப்பு மட்டும் அல்ல; அது வினாக்களின் வாயிலாக மெய்ம்மையை அடையும் தர்க்கபூர்வமான மரபு. நமது சாஸ்திரங்கள் எதனையும் ஆதாரமின்றி உரைப்பதில்லை. ஒவ்வொரு கருத்தும் தர்க்கத்தின் அடிப்படையிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளது. அத்தகைய தர்க்கநெறியே, ஒருவன் தனது சந்தேகங்களைப் போக்கிக்கொள்ள வினா எழுப்புவதை ஊக்கப்படுத்துகிறது.

கேள்வி கேட்கும் உரிமை கேள்வி கேட்கக்கூடாது என்பது சனாதன தர்மத்தின் பாணியே அல்ல. மாறாக, நம்முடைய ரிஷிகளும், ஆன்றோர்களும் வினாக்களுக்குத் தெளிவான விடையளிப்பதையே தங்களின் முதன்மைக் கடமையாகக் கொண்டிருந்தனர். நம்மிடம் உள்ள வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள் மற்றும் தத்துவ நூல்கள் அனைத்தும், காலங்காலமாகப் பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்ட சந்தேகங்களுக்குச் சான்றோர்களும், அருளாளர்களும் அளித்த விளக்கவுரைகளின் தொகுப்பாகும்.

நமது மரபின் பெருமை ஆன்மிகம் சார்ந்த நுட்பமான உண்மைகளை அறிய முற்படும்போது, மனித மனதில் இயல்பாகவே பல வினாக்கள் எழுகின்றன. அத்தகைய வினாக்களுக்கு முழுமையான தீர்வை வழங்கவே, நம் முன்னோர்கள் ஒரே ஒரு புத்தகத்தை மட்டும் அடிப்படையாகக் கொள்ளாமல், பல்லாயிரக்கணக்கான தத்துவ நுால்களைப் படைத்துள்ளனர். அறிவுத்தேடலை மதிக்கின்ற இந்தத் தனித்துவமே நமது மரபின் பெருமை.இவ்வாறு அவர் அருளுரை வழங்கினார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் மக்கள் நலன் வேண்டி சுவாமி தரிசனம் செய்தார்.அரசு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலை கோயிலில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் கொண்டாடப்பட ... மேலும்
 
temple news
மதுரை: தஞ்சாவூர் பெருவுடையார் கோயிலில் சிதைந்த சிலைகளுக்கு மாற்றாக புது சிலைகளை நிறுவ  ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் மஹாருத்ர ஹோம சிறப்பு பூஜைகள் நடந்தது. இதையொட்டி கோவில் ... மேலும்
 
temple news
பண்ருட்டி: திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத ஏகதின பிரம்மோற்சவத்தில் உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar