Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பந்தலூர் விஷ்ணு கோவிலில் சுதர்ஷன ... திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவில் அதிகாரிகளை கூண்டோடு மாற்ற முடிவு திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேதுக்கரை அருகே சேதமடைந்த ஏகாந்த சீனிவாச பெருமாள் கோயில்; சீரமைக்க கோரிக்கை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சேதுக்கரை அருகே சேதமடைந்த ஏகாந்த சீனிவாச பெருமாள் கோயில்; சீரமைக்க கோரிக்கை

பதிவு செய்த நாள்

01 ஜூன்
2026
08:06

திருப்புல்லாணி; திருப்புல்லாணி அருகே சேதுக்கரை செல்லும் வழியில் 3 கி.மீ., தொலைவில் சின்னக் கோயில் என்று அழைக்கப்படும் ஏகாந்த சீனிவாச பெருமாள் கோயில் உள்ளது.

அரை ஏக்கர் பரப்பளவில் உள்ள இடத்தில் சுற்றிலும் சீமை கருவேல மரங்களின் ஆக்கிரமிப்புகளுக்கு மத்தியில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ஏகாந்த சீனிவாச பெருமாள் கோயில் இடிபாடுகளுடன் உள்ளது. கோயிலின் அர்த்தமண்டபம், மகா மண்டபம், கருவறை மண்டபம் உள்ளிட்டவைகள் சேதமடைந்து விரிசலுடன் ஆபத்தான நிலையில் உள்ளது. இங்கு மூலவராக ஏகாந்த சீனிவாச பெருமாள் மற்றும் உள்ளார். அவருக்கு எதிர்ப்புறமாக வணங்கிய நிலையில் தமிழ் மாமுனிவர் அகத்தியர் காட்சி தருகிறார்.

இன்னொரு காலத்தில் அதிக தூரம் கொண்ட திருப்பதி சென்று முடி காணிக்கை உள்ளிட்டவைகளை செய்ய முடியாத பக்தர்கள் திருப்புல்லாணி அருகே உள்ள ஏகாந்த சீனிவாச பெருமாள் கோயிலில் முடி காணிக்கை செய்தும், காய்ச்சல், தலைவலி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படும் பொழுது ஆதித்ய ஹிருதய ஸ்தோத்திரம் சொல்லி துளசி நீர் அருந்தினால் குணமாகும் ஐதீகமும் நிலவுகிறது. இக்கோவிலில் உள்ள பெருவாரியான சிற்பங்கள் சிதலமடைந்தும் சுதை சிற்பங்கள் உடைந்தும், பொலிவின்றி காணப்படுகின்றன. பழமையும் புரதான சிறப்பும் பெற்ற இக்கோயிலை புணரமைப்பு செய்து புதியதாக கட்டுமான பணிகள் மேற்கொள்ள வேண்டும். பக்தர்கள் யாருக்கும் தெரியாத அளவிற்கு வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி தூய்மையாக வைக்க வேண்டும். பழமையான ஏகாந்த சீனிவாச பெருமாள் கோயில் என பெயர் பலகை வைக்க வேண்டும். இதன் மூலம் யாத்திரிகர்களுக்கும் பக்தர்களுக்கும் இக்கோயிலின் மகத்துவம் பற்றி விளங்க தெரியவரும். எனவே ஹிந்து சமய அறநிலையத்துறையினர் இக்கோயிலை புணரமைத்து பக்தர்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் செய்வதற்கென பல நாட்களை குறிப்பிட்டிருந்தாலும், மாதம்தோறும் அமாவாசையிலாவது தர்ப்பணம் ... மேலும்
 
temple news
விஷசஸ்திரஹத பிதுர் மகாளயம் என்பது துர்மரணம் அடைந்தவருக்கு தர்ப்பணம் செய்ய சிறந்த நாளாகும். இயற்கை ... மேலும்
 
temple news
புதுச்சேரி: உழவர்கரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், பிரதோஷத்தையொட்டி பாசுபதாஸ்திர ஜெப ஹோமம் ... மேலும்
 
temple news
உங்கள் ராசி என்ன? மேஷம் முதல் மீனம் வரை தொழில், குடும்பம், பொருளாதாரம், உடல்நலம் எப்படி இருக்கும். இந்த ... மேலும்
 
temple news
கோவை:  புரட்டாசி மாதம் பிரதோஷ தினத்தை முன்னிட்டு கோவை மதுக்கரை மலை மேல் அமர்ந்திருக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar