பதிவு செய்த நாள்
23
ஜன
2013
10:01
வடலூர்: வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில், 142 வது தைப்பூச ஜோதி தரிசன விழா, வரும், 27ம் தேதி நடக்கிறது. கடந்த, 19ம் தேதி முதல், 21ம் தேதி வரை, தருமசாலையில் மகா மந்திரம் ஓதுதல் நடந்தது. 22ம் தேதி முதல், 25ம் தேதி வரை ஞான சபையில், திருஅருட்பா முற்றோதல் நடைபெறும். வரும், 26ம் தேதி காலை, 5:00 மணிக்கு அகவற் பாராயணமும், காலை, 7:30 மணிக்கு தருமசாலை, மருதூரில் அவதார சன்னதி, கருங்குழி ஆகிய இடங்களில் கிராம வாசிகள் சார்பில் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. காலை, 10:00 மணிக்கு, ஞானசபையில், பார்வதிபுரம் கிராமவாசிகள் சார்பில், 13 கொடி பாட்டுகள் பாடி சன்மார்க்க கொடி ஏற்றப்பட்டு தைபூச ஜோதி தரிசன விழா தொடங்குகிறது. தைப்பூச ஜோதி தரிசன விழாவான, 27ம் தேதி, ஆறு கால பூஜை நடந்து, திரை விலக்கப்படும்.