அன்னூர் முத்து மாரியம்மன் கோவிலில் நாளை திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2026 07:06
அன்னூர்; முத்துமாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவில், நாளை திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.
செல்லப்பம்பாளையம் அருகே சாலையூர், முத்துமாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழா கடந்த 27ம் தேதி துவங்கியது. ஜூன் 1ம் தேதி வரை தினமும் காலை 9:00 மணிக்கு பொது பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர். இன்று (2ம் தேதி) இரவு 8:00 மணிக்கு படைக்கலம் எடுத்து வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. நாளை (3ம் தேதி) காலை 6:00 மணிக்கு அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடைபெறுகிறது. காலை 9:00 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இதையடுத்து, கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தலும், மாவிளக்கு எடுத்தலும் நடைபெறுகிறது. இரவு 7:00 மணிக்கு கம்பம் பிடுங்குதலுடன் விழா நிறைவு பெறுகிறது. வரும் 4ம் தேதி காலை 8:00 மணிக்கு மஞ்சள் நீராட்டு நடைபெறுகிறது.