Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news  வாடிப்பட்டி பாலதண்டாயுதபாணி ... அய்யலுார் கோயில் திருவிழாவில் வினோத நேர்த்திக்கடன் வழிபாடு அய்யலுார் கோயில் திருவிழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக விழாவில் திருஊடல்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக விழாவில் திருஊடல்

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2026
08:06

 பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் திரு ஊடல் நடந்து கொடி இறக்கத்துடன் வைகாசி விசாக விழா நிறைவு அடைந்தது.

பழநி கிழக்கு ரத வீதி பெரியநாயகி அம்மன் கோயிலில் வைகாசி விசாக விழா மே 24ல் துவங்கியது. விழா நாட்களில் தங்கமயில், காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளி யானை, வெள்ளி மயில், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் சுவாமி புறப்பாடு நடந்தது. மே 29 இரவு வள்ளி, தெய்வானை முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம், மே 30ல் தோளுக்கினியான் வாகனத்தில் தேரேற்றம் நடந்தது. வைகாசி விசாக தேரோட்டம் ரத வீதிகளில் நடந்தது. நேற்று காலை 11:00 மணிக்கு பெரியநாயகி அம்மன் கோயிலில் தெய்வானை கோயிலுக்குள் சென்றபின் நடையை அடைத்தனர். ஓதுவார் சிவநாகராஜன் பாடல்கள் பாடி திருஊடல் நிகழ்ச்சியை நடத்தினார். பின் நடை திறந்து வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமிக்கு தீபாராதனை நடந்தது. இரவு கொடி இறக்குதலுடன் விழா நிறைவு அடைந்தது.

திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் சைவ சமய குரவர்கள் நால்வரில் ஒருவரான திருஞானசம்பந்தருக்கு ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி சிவன், பார்வதிக்கு சிறப்பு பூஜைகள் நடந்ததும் தம்பதி சமேதராக ரிஷப வாகனத்தில் கோயில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். உற்சவ மூர்த்தி திருஞானசம்பந்தருக்கு சிறப்பு பூஜைகள் நடந்ததும் சிவன், பார்வதி ஞானப்பால் ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது. கோயில் கண்காணிப்பாளர் அழகர்சாமி உட்பட ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: மஹாளய பட்ச காலத்தில், துறவறம் பூண்ட சந்நியாசிகள், ரிஷிகள் மற்றும் குருமார்களின் ஆன்மா ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை மாவட்டம் சதுரகிரி மலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோயில் மகாளய அமாவாசை விழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் நவராத்திரி பிரமோற்சவம் வரும் 12ம் தேதி தொடங்க உள்ள நிலையில் 6 நாட்களுக்கு ... மேலும்
 
temple news
மதுரை: கள்ளழகர் திருக்கோயிலில் பெயர்ப்பலகையில் இருந்து தமிழ் மொழி எவ்விதத்திலும் நீக்கப்படவில்லை. ... மேலும்
 
temple news
புதுடில்லி: 25 ஆண்டுகால மக்கள் சேவை நிறைவு பெற்றதையொட்டி, டில்லியில் விநாயகர் கோவிலில் மோடி வழிபாடு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar