வில்லியனுார் திருக்காமீஸ்வரர் கோவில் தேர் திருவிழா தெப்பல் உற்சவம்
பகிர்கcopied
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02ஜூன் 2026 07:06
வில்லியனுார்: திருக்காமீஸ்வரர் கோவில் பிரமோற்சவ தேர் திருவிழாவில் நேற்றுசண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் நிறைவு பெற்றது.
வில்லியனுார் கோகிலாம்பிகை சமேத திருக்காமீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவ தேர் திருவிழா கடந்த 20ம் தேதி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.தொடர்ந்து நடைபெற்ற விழாவில் தினமும் ஒவ்வொரு மரபினர்கள் சார்பில் காலையில் சிறப்பு அபிேஷகமும், இரவு அலங்கரிக்கப்பட்ட சுவாமி வீதியுலா நிகழ்ச்சியும் நடந்தது. இதில் முக்கிய விழாவாக 23ம் தேதி பாரிவேட்டை, 25ம் தேதி 63 நாயன்மார்கள் வீதியுலா, 27ம் தேதி திருக்கல்யாணம் உற்சவம், 28ம் தேதி தேர் திருவிழா நடந்தது. கடந்த 29ம் தேதி இரவு தெப்பல் உற்சவம் நடந்தது. விழாவை முன்னிட்டு மாலை 5:00 மணியளவில் சுவாமிக்கு சிறப்பு அபிேஷகமும், மாலை 6:00 மணியளவில் தீபாரதனையும், இரவு 10:00 மணிக்கு மேல் தெப்பல் உற்சவம் நடந்தது.
விழாவில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., முன்னாள் சேர்மன் பாலமுருகன், வெற்றிட மடம் சிறப்பு அதிகாரி மாணிக்கவேல் மற்றும் சாரம் துளுவ வேளாளர் மரபினர்கள் கலந்துகொண்டனர். 30ம் தேதி இரவு முத்துப்பல்லக்கு உற்சவமும், 31ம் தேதி விடையாற்றி உற்சவமும், நேற்று சண்டிகேஸ்வரர் உற்சவத்துடன் தேர் திருவிழா நிறைவு பெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருகாமீஸ்வரன், சிவனடியார்கள், சிவாச்சாரியர்கள் மற்றும் உற்சவ மரபினர்கள் செய்தனர்.