Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவிடைக்கழி சுப்பிரமணிய சுவாமி ...  தாண்டிக்குடி பாண்டி முனீஸ்வரர் கோயில் விழா தாண்டிக்குடி பாண்டி முனீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரம் கோயிலில் திருப்பணியில் பழைய ஓடுக்கு பாலீஷ் : பக்தர்கள் அதிர்ச்சி
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரம் கோயிலில் திருப்பணியில் பழைய ஓடுக்கு பாலீஷ் : பக்தர்கள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2026
08:06

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் திருக்கோயில் உபகோயிலில் ரூ.22 லட்சத்தில் நடக்கும் திருப்பணியில், பழைய ஓட்டை துடைத்து புதுப்பிக்கும் பணியை கண்டு பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் உபகோயிலான காட்டுபிள்ளையார் கோயில் ராமேஸ்வரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ளது. அக்காலத்தில் பக்தர்கள் முதலில் இக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு திருக்கோயிலுக்கு செல்வது வழக்கம். பழமையான இக்கோயிலில் 2025ல் தி.மு.க., ஆட்சியில் ரூ. 22 லட்சம் செலவில் திருப்பணிகள் துவங்கியது.

இதில் கோயில் சுற்றியுள்ள சுவர்கள் வார்னீஷ் செய்தும், கோபுரத்தில் மராமத்து செய்து வர்ணம் பூசி புதுப்பிக்கும் பணி நடக்கிறது. இந்நிலையில் கோயில் சன்னதி முன்புள்ள பழைய ஓடு கொட்டகையை அகற்றாமல், பழைய ஓடுகள், பனை மரத்தடிகளை தண்ணீரில் சுத்தம் செய்து காவி மற்றும் கருப்பு கலர் பூசி புதுப்பித்து மீண்டும் பொருத்தினர். இதனை கண்ட பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருப்பணி திட்ட மதிப்பின்படி பழைய ஓடுகள், பனைமர தடிகளை மராமத்து செய்து புதுப்பிக்கும் பணி நடக்கிறது என கோயில் ஊழியர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து தமிழக வி.எச்.பி., ராமநாதபுரம் மண்டல பொறுப்பாளர் ஆ.சரவணன் கூறுகையில் : திருப்பணிக்கு ரூ. 22 லட்சம் செலவிட்ட ஹிந்து அறநிலைத்துறை, பழைய ஓடுகளை அகற்றி புதிய ஓடுகள் பொருத்தினால் நிதி கஜானா காலியாகி விடுமா, புதிய ஓடு பொருத்த கஞ்சத்தனம் ஏன்?. பழைய ஓடுக்கு மீண்டும் வர்ணம் பூசி பொருத்தினால், ஒரிரு ஆண்டுகளில் சேதமடைய வாய்ப்பு உள்ளது. எனவே புதிய ஓடுகளை பொருத்திட தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றார்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: ஸ்ரீ வியாசராஜ மடம் சார்பில், தஸமனோத்ஸவம் அதாவது பத்து ஆண்டுகளான பீடத்தை அலங்கரிக்கும் ... மேலும்
 
temple news
அழகர்கோவில்: அழகர்கோவில் கள்ளழகர் கோயிலில் புரட்டாசி குடை திருவிழாவை முன்னிட்டு தங்க கருட வாகனத்தில் ... மேலும்
 
temple news
செஞ்சி: செஞ்சி கோட்டை வெங்கட்ரமணர் கோவிலில் நடந்த திருக்கல்யாண உற்சவத்தில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
பழநி: பழநி வன்னி விநாயகர் கோயில் நிர்வாகம், தமிழ்நாடு பிராமண ஸமாஜம் சார்பில் வன்னி விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: துடியலூர் அருகே பன்னீர்மடையில் உள்ள உலகளந்த பெருமாள் திருக்கோயில், கிருஷ்ணசாமி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar