பதிவு செய்த நாள்
04
ஜூன்
2026
04:06
பண்ருட்டி: பாலமுருகன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பண்ருட்டி வட்டம், வேலன்குப்பம், புதிய ஏரிக்கரையில் அமைந்துள்ள விநாயகர், பாலமுருகன், இடும்பன், கடம்பன் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி கடந்த, 3ம் தேதி முதற்கால பூஜையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கியது. இன்று காலை, 6:00 மணிக்கு சுவாமிக்கு காலை விநாயகர் பூஜை, வருண பூஜை, சந்திர பூஜை, சிவ சூரியாராதனம், மூலிகை திரவிய ஹோமம், பூர்ணாஹுதி யாத்ராதானம் நடந்தது. காலை 10:30 மணியளவில் யாக சாலையிருந்து கடம் புறப்பாடாகி விமான கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது.