Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பகவானை மிஞ்சும் ராம நாமம் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன் தலையில் தேங்காய் உடைத்து ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தடைகளைத் தகர்ப்போம் ஹனுமன் காட்டிய வழியில்...!
எழுத்தின் அளவு:
தடைகளைத் தகர்ப்போம் ஹனுமன் காட்டிய வழியில்...!

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2026
10:06

சீதையைத் தேடிக் கடல் கடந்த ஹனுமனின் சரித் திரம், நம் லட்சியப் பயணத்தில் வரும் தடைகளை எவ்வாறு சாதுரியமாக வெல்ல வேண்டும் என்ற வாழ்வியல் பாடத்தை உணர்த்துகிறது. திருப்பூர், ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் வைகாசி விசாகத் தேர்த்திருவிழாவை முன்னிட்டு, ‘ஸ்ரீ மாருதி மகிமை’ என்ற தலைப்பில் ஆன்மிகச் சொற்பொழிவாளர் நாகை முகுந்தன் ஆற்றிய உரை:

அன்பான தடை ஹனுமன் வான்வழியே சென்றபோது மைநாக மலை அன்போடு உபசரித்து இளைப்பாறக் கோரியது. ஆனால், லட்சியமே முக்கியம் என அனுமன் தடையைக் கடந்து பறந்தார்.

நாமும் லட்சியப் பாதையில் முன்னேறும்போது, நம்மைத் திசைதிருப்பும் தற்காலிக சுகங்கள் மற்றும் ‘அன்பான தடை’களில் சிக்கிப் பயணத்தைத் தாமதப்படுத்தக் கூடாது.

ஆணவத் தடை அரக்கி சுரசை தன் வாயைப் பெருக்க, ஹனுமன் சாதுரியமாகத் தன் உடலைச் சுருக்கி அவளது வாய்க்குள் சென்று வெளியே வந்தார்.

நம் வாழ்வில் பேராணவமும் ஈகோவும் கொண்ட மனிதர்களை எதிர்கொள்ளும்போது, நாமும் வீம்புக்கு மல்லுக்கட்டாமல் சில இடங்களில் வளைந்து கொடுத்துப் போவதே புத்திசாலித்தனம்.

பொறாமைத் தடை நேருக்கு நேர் வராமல் ஹனுமனின் நிழலைப் பிடித்து இழுத்து அவரது வேகத்தைத் தடுத்தாள் அரக்கி அங்காரதாரை.

வாழ்வில் நாம் உயர்வடையும் போது, நமக்குப் பின்னால் நின்று வதந்தி களைப் பரப்பி, புறம்பேசி நம் பெயரைக் கெடுக்க முயலும் பொறாமைக் காரர்களால் நம் உழைப்பும் வேகமும் முடங்கி விடக்கூடாது.

ஹனுமன் எவ்வாறு ‘ராம நாமம்’ என்னும் தாரக மந்திரத்தையும், சாதுரியத்தையும் துணையாகக் கொண்டு தடைகளை வென்றாரோ, அதுபோல நாமும் துணிச்சலோடு செயல்பட்டால் வாழ்க்கைக் கடலை எளிதாகக் கடந்து வெற்றிக் கரையை அடையலாம்.

நிகழ்ச்சி ஏற்பாடுகளை, கிளாசிக் போலோ குழுமத்தின் கோபாலகிருஷ்ணன், சிவராம் மற்றும் சவுமிஸ்நடராஜன் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி ; இந்தியா வந்துள்ள வெனிசுலா அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ் புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
கோவை சிங்காநல்லூர் ஸ்ரீ உலகளந்த பெருமாள் என்று அழைக்கப்படும் ஸ்ரீ த்ரிவிக்ரம நாராயண பெருமாள் கோவில் ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் அருகே அய்யாபட்டி ,கோட்டையூர் கிராமங்களில் முத்தாலம்மன் கோயில் திருவிழாக்கள் நடந்தது. ... மேலும்
 
temple news
 மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள ஏரி காத்த கோதண்ட ராமர் கோவிலில் ஆனி மாதம் நடக்க உள்ள பிரம்மோத்சவ ... மேலும்
 
temple news
தஞ்சாவூா்; வைகாசி திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு தஞ்சையில் உள்ள பெருமாள் கோவில்களில் இருந்து 27 ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar